'முஸ்லிம் சமூகம் நசுக்கப்படும்போது, அரசுடன் தேனிலவு கொண்டாடும் தேவை எமக்கில்லை'
முஸ்லிம் சமூகம் நசுக்கப்படும்போது அரசாங்கத்துடன் தேனிலவு கொண்டாடும் தேவை எமக்கில்லை. எமது சமூகத்தின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எந்த அரசாவது முனைந்தால் சம்பந்தப்பட்ட மக்களுடன் வீதிக்கு இறங்கி ஜனநாயக வழியில் போராடவும் தயாராவுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் ஜனோபர் தெரிவித்துள்ளார்.
வில்பத்து விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் பூர்வீக வாழ்விடங்களான மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக் குழி முதலான பிரதேசங்களை வில்பத்து சரணாலயத்துக்குச் சொந்தமானது என்று இந்த அரசு இனவாத நோக்குடன் தொடர்ந்தும் சொந்தம் கொண்டாடி மீண்டும் ஒரு 1990 ஒக்டோபரை விடவும் கொடிய நிகழ்வை “நல்லாட்சி” என்ற பெயருக்குள் மறைந்து கொண்டு அரங்கேற்ற முனைவதும் வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இழுத்தடிக்கப்படுவதும் மிகவும் வேதனையை அளிக்கிறது.
எனவே, தமிழ்த் தரப்பு கூறுவது போல் “மோதகமும் கொழுக்கட்டையும் உருவத்தால் வேறுபட்டாலும் உள்ளீடுகள் அனைத்தும் ஒன்றே” என்ற விடயம் நல்லாட்சி ஜனாதிபதியின் அண்மைக் கால செயற்பாட்டிலிருந்து தெளிவாகிக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் சந்தித்த தோல்விகளுக்கான காரணங்கள் இந்த அரசுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். தொடர்ந்தும் இந்த நல்லாட்சி அரசு சிறுபான்மை சமூகத்தின் இருப்பு, சமயம், கலாசாரம், உரிமை என்பவற்றில் கை வைக்குமாக இருந்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மைச் சமூகத்தோடு இந்த அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க வேண்டிய காலம் வெகு விரைவில் வரும் என்பதில் சந்தேகமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
Very good
ReplyDeleteஅப்ப நீங்களும் உங்கள் கட்சியும் பையை நிரப்ப பேரம்பேசலில் ஈடுபடப்போறயல். அதற்கு ஏன் வீதியில் இறங்க வேண்டும். ரகசியமாக ஏதாவது ஹோட்டலில் அல்லது வெளிநாட்டில் சந்தித்தால் சரிதானே.
ReplyDeleteபோங்கடா உங்கள் மானங்கெட்ட பிழைப்பும் நீங்களும். இந்நேரம் உங்கள் தலைவர்கள் மஹிந்த மடியில் முஸ்லிம்களை விற்பதற்கு அடிமைச்சாசனம் எழுதிக்கொண்டிருப்பானுகள். மாறி மாறி மாற்றானிடம் எங்களை விற்பதுதானே உங்கள் தொழில். மானம்கெட்ட. ..........
(முதலில் பணிவாக வேண்டிக்கொள்கிறேன் இந்த அரசாங்கத்தை நல்லாட்சி என்று யாரும் இனிமேல் பேச வேண்டாம்)பொதுவாக இலங்கை அரசு என்று சொன்னால் போதும்.அரசாங்கத்தோடு தேனிலவு கொண்டாட மாட்டோம் என்று இந்த சில்லறை உறுப்பினர்கள் சொல்வதால் எந்தப் பிரயோசனமுள் கிடையாது உடனடியாக பாராளுமன்றத்தில் சீட்டை சூடேற்றிக்கொண்டு குறைந்த விலையில் பாராளுமன்ற ருசியான சாப்பாட்டை உண்டு கொண்டு தூங்கிக்கொண்டு இருக்கும் உங்களின் capital களை வாயை துறக்க சொல்லுங்கள்.முஸ்லிம்களின் துரோகி இந்த அரசாங்கத்தை விட நமது வாக்குகளை வாங்கிக்கொண்டு தூங்கும் நமது தலைகள்தான்.பச்சத்துரகம் செய்யும் அரசாங்கத்தோடு இன்னும் ஒட்டிக்கொண்டு அகராதி பேசிக்கொண்டு இருக்க வெட்கம் என்று ஓன்று இவர்களுக்கு இருக்கிறதா?ரோசம் மானம் ,மரியாதை ,சூடு சொரணை ஏதும் இருந்தால் இவர்கள் உடனடியாக இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்.
ReplyDelete(முதலில் பணிவாக வேண்டிக்கொள்கிறேன் இந்த அரசாங்கத்தை நல்லாட்சி என்று யாரும் இனிமேல் பேச வேண்டாம்)பொதுவாக இலங்கை அரசு என்று சொன்னால் போதும்.அரசாங்கத்தோடு தேனிலவு கொண்டாட மாட்டோம் என்று இந்த சில்லறை உறுப்பினர்கள் சொல்வதால் எந்தப் பிரயோசனமுள் கிடையாது உடனடியாக பாராளுமன்றத்தில் சீட்டை சூடேற்றிக்கொண்டு குறைந்த விலையில் பாராளுமன்ற ருசியான சாப்பாட்டை உண்டு கொண்டு தூங்கிக்கொண்டு இருக்கும் உங்களின் capital களை வாயை துறக்க சொல்லுங்கள்.முஸ்லிம்களின் துரோகி இந்த அரசாங்கத்தை விட நமது வாக்குகளை வாங்கிக்கொண்டு தூங்கும் நமது தலைகள்தான்.பச்சத்துரகம் செய்யும் அரசாங்கத்தோடு இன்னும் ஒட்டிக்கொண்டு அகராதி பேசிக்கொண்டு இருக்க வெட்கம் என்று ஓன்று இவர்களுக்கு இருக்கிறதா?ரோசம் மானம் ,மரியாதை ,சூடு சொரணை ஏதும் இருந்தால் இவர்கள் உடனடியாக இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்.
ReplyDeleteமுஸ்லிம் சிவில் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து நமது அரசியல் தலைகள் அனைவரையும் அரசை விட்டு வெளியேறுமாறு அழுத்தம் கொடுங்கள்.(அவர்கள் சொவார்கள் அரசுடன் இருந்தால்தான் நாம் எதையும் பேச முடியும் என்று)இதனை வருடங்களாக தமிழ் தரப்பு அரசாங்கத்தோடு செராமல்தான் அம்மக்களின் பிரச்சனைகளை தைரியமாக ஐநா வரை கொண்டு சென்று காரியம் கடக்கிறது.ஏன் இவர்களுக்கு மட்டும் முடியாது.அடுத்த தேர்தல் வரும் வரை இங்குதான் இருப்பார்கள் அடுத்த அரசாங்கம் வரும் வாய்ப்பு இருந்தால் சமுதாயத்துக்காக இந்த அரசை விட்டு விலகி புதியவர்களுடன் சேருகின்றோம் என்று வழமையான தந்திரக்கதையை சொல்வார்கள்.முஸ்லிம் தலைவர்களே உங்களால்தான் எங்களுக்கு பிரச்சினை தயவு செய்து உடனடியாக இந்த அரசாங்கத்தை விட்டு வேளிஎருங்கள்.நமக்கு வெற்றி நிச்ச்ச்சயம் அல்லாஹ் தருவான்.(இன்று இந்த நமது அமைச்சர் களைவிட நமது உரிமைகளுக்காக நாடு கடந்து மேற்கத்திய நாட்டில் வாழும் நமது சகோதரர்களின் பங்களிப்பு மிகப்பெரியது)ஆகவே இந்த அமைச்சர்கள் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்.சகோதரர்களே.
ReplyDelete