Header Ads



இலங்கயின் நீர்வளத்தை சூறையாட, வருகிறது கொக்கா-கோலா


 ஆசிய நாடுகளுக்கு விநியோகம் செய்வதற்கான கொக்கா-கோலா பானம் விநியோகம் செய்வதற்கான அந்நிறுவனத்தின் பிரதான தொழிற்சாலையை இலங்கையில் நிறுவுவது தொடர்பில் அந்நிறுவனம் அரசுடன் கலந்துரையாடியுள்ளதாக இலங்கை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதன் மூலம் தனது மிகப்பெரிய சந்தையான இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து கொக்கா-கோலாவை ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருக்கும் என்று அந்நிறுவனத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான தலைமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொக்கா-கோலா நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியந்திற்கான தலைவர் ஜோன் மர்பி மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கடந்த வாரம் அமைச்சகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கயின் இயற்கை நீர்வளம் அங்கு தொழிற்சாலை அமைப்பதற்கு ஏதுவாக இருப்பதாக கொக்கா-கோலா நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த தகவல் உறுதி செய்வதற்காக, நிதி அமைச்சின் பொறுப்பை தற்காலிகமாக வகித்துவரும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவிடம் பிபிசி சிங்கள சேவை தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த விஷயம் தொடர்பில் இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் பதிலளித்தார்.

கொக்கா-கோலாவின் தொழிற்சாலையொன்று தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான பியகமையில் அமைந்துள்ளதோடு, அந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவினால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகின்றது என்று கூறி கடந்த வருடம் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 comment:

  1. கடந்த காலத்தில் இந்தியா போன்ற நாடுகளில் நிறுவுவதற்கு முயற்சி செய்யப்பட்டு அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி விரட்டியடிக்கப்பட்டதன் காரணத்தால் இலங்கையில் காலூன்ற எத்தணிக்கிறார்கள்

    ReplyDelete

Powered by Blogger.