என்னை ஆட்டுவிக்க முடியாது - பைசர் முஸ்தபா ( உள்ளூராட்சி அமைச்சில் நடந்தது என்ன..?)
எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்ைகயை உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று நிராகரித்தார். அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக்குழுவில் இருவர் கையொப்பம் இடாததால் சட்டப்படி இந்த அறிக்ைகயை ஏற்றுக்ெகாள்ள முடியாது என்பதைக் காரணம் காட்டியே அமைச்சர் அறிக்ைகயை ஏற்க மறுத்துள்ளார்.
ஏனைய இருவருக்கும் எழுத்து மூலம் அறிவித்து உடன் கையொப்பம் பெற்று அந்த அறிக்ைகயை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக்குழுவின் தலைவர் அசோக்க பீரிஸிடம் கேட்டுக்ெகாண்டார். அதற்கு இணக்கம் தெரிவித்த தலைவர் அசோக்க பீரிஸ், குறித்த இருவரையும் கையொப்பம் இடுமாறுகூறி அறிக்கையுடன் எழுத்துமூலக் கடிதத்தை உடன் அனுப்பி வைப்பதாகவும் அவர்கள் கையொப்பமிட்டதும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் அறிக்ைகயை ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக்குழுவின் அறிக்ைகயை சமர்பிப்பதற்காக குழு தலைவர் அசோக்க பீரிஸ் உள்ளிட்ட மூவர் நேற்று (02) மாலை கொழும்பு யூனியன் வீதியில் அமைந்துள்ள அமைச்சுக்கு வருகை தந்திருந்தனர். எனினும் குழுவில் நியமிக்கப்பட்ட ஐவரும் அறிக்ைகயில் கையொப்பம் இடாததன் காரணமாக அமைச்சர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென உறுதியாக மறுத்து விட்டார்.
"கையொப்பம் இடாத இரண்டு உறுப்பினர்களும் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் என்பது எனக்கு முக்கியமல்ல. நான் எல்லை நிர்ணயம் தொடர்பான சட்டமூலத்துக்கமையவே செயற்படுகின்றேன்.என்னை எந்தவொரு அரசியல் கட்சியாலும் ஆட்டுவிக்க முடியாது. ஏனைய இருவரும் கையொப்பம் இட்ட பின்னரே நான் இந்த அறிக்ைகயை ஏற்றுக்ெகாள்வேன்.
பிரதான கட்சிக்காரர்கள் நினைத்தபடி அமைச்சினை நடத்துவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்"என்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இதேவேளை ஏனைய இருவரும் கையொப்பம் இடுவதற்கு மறுப்புத் தெரிவித்தால் அடுத்த கட்டமாக என்ன செய்ய முடியும் என்பது குறித்து தான் சட்ட வரையறைக்குள் ஆராய்ந்து நடவடிக்ைக எடுப்பேன். இதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது. அனைத்தும் சட்டப்படியே முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக்குழு சுயாதீனமாகவே செயற்பட்டது. இதில் நான் எவ்வித தலையீடும் செய்யவில்லை. கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட அனைத்து குழுக்களும் பெயரளவில் தான் இயங்கின. அமைச்சர்களாலேயே அறிக்ைககள் தயாரிக்கப்பட்டன.
குழு வெறுமனே கையொப்பம் இடுவதற்காகவே செயற்பட்டது. நான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் மதிப்பவன் என்ற வகையில் இக்குழுவில் எவ்வித தலையீடும் செய்யவில்லை. பொதுவாக எந்தவொரு அறிக்ைகயும் சட்டவரையறைக்குள் இருந்தால் மட்டுமே நான் அதனை ஏற்றுக்ெகாள்வேன். ஐவர் கொண்ட குழுவில் மூவரின் கையொப்பத்தை மட்டும் கொண்ட இந்த அறிக்ைகயை என்னால் ஏற்றுக்ெகாள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குழுவில் அங்கம் வகிக்கும் ஐவரும் இணைந்து அறிக்ைகயை தயாரித்திருந்தபோதும் கையொப்பம் இடுவதற்காக மூவர் மட்டுமே வந்திருந்ததாகவும் ஏனைய இருவரும் அறிக்ைகயை முற்றாக வாசித்த பின்னரே கையொப்பம் இட முடியும் என தெரிவித்ததால் காலத்தை கவனத்திற் கொண்டு பெரும்பான்மை மூவரின் கையொப்பத்துடன் அறிக்ைகயை எடுத்து வந்ததாகவும் எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக்குழுவின் தலைவர் அசோக்க பீரிஸ் நேற்று விளக்கமளித்தார்.
தலைவர் அசோக்க பீரிஸ் இன்று எனக்கும் அமைச்சின் செயலாளருக்கும் மதிய போசனம் அளித்தார். பத்திரிகைகளில் வெளிவந்ததுபோல் எங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை. இது தான் புதிய கலாசாரம். அசோக்க பீரிஸும் புதிய கலாசாரத்துக்குள் வந்துள்ளார். அறிக்ைகயுடன் வரும் அவரை தான் வரவேற்க்க காத்திருப்பதாக அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறி பல தடவை எழுந்து நின்று வாசலை எதிர்பார்ப்பதும் அமருவதுமாக இருந்தார்.
அச்சந்தர்ப்பத்தில் செய்தியாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு அமைச்சர் பாதிலளித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் அசோக்க பீரிஸ் உள்ளிட்ட மூவர் அங்கு வருகை தந்தனர். அசோக்கபீரிஸ் அமைச்சரிடம் அறிக்ைகயை சமர்பிக்க முன்வந்தார். அப்போது அமைச்சர் அதனை ஏற்றுக்ெகாள்ளாது செயலாளரை அனைத்தும் சரியாக இருக்கிறதா என பார்க்கும்படி கூறினார்.
அதற்கு அசோக்க பீரிஸ், அறிக்ைகயினை மூன்று பகுதிகளாக கொண்டு வந்திருப்பதாதகவும் முதலாவது புத்தக வடிவில் சுருக்கமாகவும் இரண்டாவது புதிய எல்லை அடிப்படையிலான தேர்தல் தொகுதிகளைக் கொண்டதாகவும் மூன்றாவது இறுவெட்டு வடிவிலும் இருப்பதாகவும் கூறினார். அனைத்தும் மூன்று மொழிகளிலும் இருக்கிறதா? என அமைச்சர் கேட்டார். இதற்கு இறுவெட்டைத் தவிர்ந்த ஏனைய இரண்டும் மூன்று மொழிகளிலும் இருப்பதாக பீரிஸ் பதிலளித்தார். அதற்கு அமைச்சர் இறுவெட்டினையும் மொழிபெயர்க்குமாறு கூறினார். அதற்கு பீரிஸ் அப்படியானால் இன்னும் இரண்டு வருடங்கள் செல்லும் என்றார்.
குழுவில் உள்ள ஐவரும் கையொப்பம் இட்டுள்ளனரா என அமைச்சர் கேட்டதற்கு அவர் இல்லை மூவர் மட்டுமே கையொப்பம் இட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து அமைச்சர் அறிக்ைகயை ஏற்றுக்ெகாள்வதற்கு மறுப்பு தெரிவித்தார்.இச்சந்தர்ப்பத்தில் உடகவியலாளர்களுக்கும், அமைச்சருக்குமிடையில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. லக்ஷ்மி பரசுராமன்
Post a Comment