பிரிட்டனின் இலங்கைத் தூதுவருடன், யாழ்ப்பாண முஸ்லிம்கள் சந்திப்பு (படங்கள்)
பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமரி விஜயவர்த்தனாவுடன் யாழ்ப்பாண முஸ்லிம்கள் திங்கட்கிழமை, 30 ஆம் திகதி சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள், யாழப்பாணம் தவிர்ந்து ஏனைய பகுதிகளில் அகதிகளாக வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த இச்சந்திப்பில் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பு சார்பில் அஸாஹிம், மொஹமட், ரமீஸ், அஸகர், அஸ்வர், தஸ்லிம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இவ்வளவு காலமும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் விவகாரங்கள் தமது கவனத்திற்கு கொண்டு வரப்படாமை குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியுள்ள பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமரி விஜயவர்த்தனா எதிர்காலத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களுடன் தொடர் பேச்சுக்களில் ஈடுபடவும் இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது. இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதாக உறுதிவழங்கினார்.
மாஷா அல்லாஹ் நல்லதோர் அடித்தளம் இந்த சகோதரர்கள் செய்து வரும் சமூக சேவை எல்லோருடை மனதிலும் தொடும் விதமாகவே அமைந்துள்ளது,அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்வானாக ஆமீன்.
ReplyDelete