வில்பத்துவுக்கு முஸ்லிம்கள், சேதத்தை ஏற்படுத்தவில்லை - மஹிந்த ராஜபக்ஷ
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
வில்பத்து சரணாலயத்துக்கு முஸ்லிம்கள் எவ்வித சேதத்தையும் எற்படுத்தவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
நேற்று (11) புதன்கிழமை டுவிட்டர் இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இப்பேட்டியில் வில்பத்து தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தே அவர் இதனைத் தெரிவித்தார்.
வில்பத்து பாதுகாப்பு வலயத்துக்கு எந்த விதமான சேதமும் ஏற்படுத்தப்படவில்லை. என்னுடைய ஆட்சிக் காலத்தின் பொழுது வில்பத்து எல்லைக்கு அப்பால் உள்ள காணிகளை மன்னாரில் இருந்து வந்த அப்பாவி முஸ்லிம்களை, புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களை குடியமர்த்துவதற்கான முதற்கட்டப் பணிகளை என்னுடைய அரசாங்கம்தான் செய்தது. அன்று முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் ஆளணி அமைத்து குறித்த நிலங்களை இனங்கண்டு, அளந்து அவர்கள் குடியேறுவதற்காக வேண்டிய வசதிகளை என்னால் செய்து கொடுக்க முடிந்தது. அதற்கப்பால் யாராவது காடுகளை அழித்தார்கள் என்று வனப் பாதுகாப்பு சொல்வார்களேயானால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கலாம். இதனை றிஷாத் பதியுதீன் அமைச்சரே கூறியிருக்கின்றார்.
எனவே வீடு வாசல்களை இழந்து கையில் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு வந்த அப்பாவி மக்ககளுக்கு இன்னல் விளைவிப்பதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சொன்னார்.
எனக்கும் இன விரோதத்தை தூண்டுபவர்களுக்கும் இடையில் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. நான் ஓர் இன விரோதியும் இல்லை. எல்லா விடயங்களையும் ஒன்றுபோல் கவனிக்கக் கூடியவன். உண்மையிலே அன்றும் இன்றும் நான் இந்த நாட்டு முஸ்லிம்களோடு மிகவும் நெருக்கமாக வாழப் பழகிக் கொண்டுள்ளேன். எனவே எந்தவிதமான வன்செயலுக்கும் இடம் கொடுப்பதற்கு என்னுடைய செயற்றிட்டத்தில் இடம் இல்லை. இனத்துவேசத்தை நான் முற்றாக வெறுக்கின்றேன்.
நீங்கள் ஏன் இவ்வளவு இளமைத் துடிப்போடு இருக்கின்றீர்கள் என்று உலக ஊடவியலாளர்கள் வியப்போடு வினா எழுப்பியதற்கு?
அதற்கு காரணம் மக்களுடைய ஆசிர்வாதம் ஒன்றுதான் என்று மஹிந்த ராஜபக்ஷ தனது இயற்கையான புன்னகை பூத்த முகத்தோடு கூறினார்.
Post a Comment