Header Ads



மஸ்ஜிதுல் அக்ஸா தலைவர், சாத்தானிய சட்டத்தின் சிறைவாழ்வை முடித்து விடுதலையானார்


-Abu Ariya-

மஸ்ஜிதுல் அக்ஸாவின் தலைவர், பாதுகாவலர் எனும் புனைப்பெயர்களால் அழைக்கப்படும் ஷைகுல் அக்ஸா ராஇத் ஸலாஹ் அவர்கள் இஸ்ரேலிய ஷெய்த்தானிய்ய சட்டத்தின் 9 மாத சிறை வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று -18- விடுதலையானார். அல்ஹம்துலில்லாஹ், 

மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலைக்காக போராடிய உமர் (ரழி), ஸலாஹுத்தீன் அய்யூபி, போன்றவர்களின் வரிசையில் தற்போது இவ்வும்மத்தின் பெயரால் அருள்பாளிக்கப்பட்ட புனித பூமியின் விடுதலைக்காக போராடும் ஸலாஹ}த்தீன் அவர்களின் நவீன வடிவம்தான் இந்த ராஇத் ஸலாஹ்.

அல்ஹம்துலில்லாஹ், இதில் என்ன வேடிக்கை என்றால் இஸ்ரேல் எனும் ஷெய்த்தானிய்ய அரசு எம் தலைவரை அதிகம் அதிகம் உருவாக்கி அனுப்பியிருக்கிறது.

இக்காலப்பகுதிக்குள்:-

80 புத்தகங்களை வாசித்துள்ளார் 
04 புத்தகங்களை எழுதியுள்ளார் 
23 கஸீதாக்களை (கவிதை) தொகுத்துள்ளார்

அல்லாஹ்வின் நேசர்களுக்கு சோதனைகள் என்பது சாதனைகளுக்கான படிக்கற்களாகவே அமையும்.

யா அழ்ழாஹ் மஸ்ஜிதுல் அக்ஸாவை அதன் உரிமையாளர்களாகிய எம்மிடமே கையளித்து விடுவாயாக!


1 comment:

  1. ஆமீன், இன்ஷாஅல்லாஹ்...

    ReplyDelete

Powered by Blogger.