Header Ads



நான் சுவிஸ் போகிறேன், மஹிந்தவிற்கு நக்கல் அடித்த ரணில்

ஜனநாயக நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் விரும்பியதை செய்ய சுதந்திரம் உண்டு எனவும், இருப்பினும் நானே நாட்டின் பிரதமர் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

புதுவருடத்தின் முதன்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, அரலி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது, கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். 

2017ம் ஆண்டு அரசாங்கம் கவிழ்க்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதற்கு பதிலளித்துள்ள பிரதமர், தான் அடுத்த வாரம் சுவிஸர்லாந்துக்கு செல்லவுள்ளதாகவும், அச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷ தான் கூறியதைபோல ஏதாவது முயற்சிக்க முடியும் என நகைப்பட பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.