உசைன் போல்டின், தங்கம் பறிபோகிறது..!
2008ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் ஓட்டப் பந்தய போட்டியில் சக வீரர் ஊக்க மருந்து பயன்படுத்தியதால் உசைன் போல்ட் வென்ற தங்கப் பதக்கம் பறிபோனது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர் உசைன் போல்ட். இவர் ஒலிம்பிக் போட்டியில் 100, 200, 400 மீற்றர் ஆகிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியவர்.
இந்நிலையில் பெய்ஜிங் ஒலிம்பிக்கின் 400 மீற்றர் போட்டியில் ஜமைக்கா சார்பில் உசைன் போல்ட் உடன் பங்கேற்ற சகவீரர் கார்ட்டர் சிறுநீரில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து மெதில்ஹெக்சானியமின் கலந்திருந்ததாக ஒலிம்பிக் போட்டியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதை கார்ட்டர் ஒத்துக் கொண்டதாகவும், தான் உண்ணும் உணவிலோ அல்லது பானத்திலோ அது எப்படி கலந்து தன் உடலில் சென்றது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் டிரினிடாட் அண்ட் டொபாகோவுக்கு தங்கமும், ஜப்பானுக்கு வெள்ளியும், பிரேசிலுக்கு வெண்கலமும் கிடைக்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment