Header Ads



'எமக்கு பணப்பிரச்சினை உள்ளது' - மஹிந்தவுக்கு ரணில் பதிலடி

ஐரோப்பிய சங்கத்தினால்,  GSP+ வரிச் சலுகை, நிறுத்தப்பட்டதால், இலங்கைக்கு எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

அவரது கருத்துக்கு பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 

GSP+ வரிசலுகை கிடைத்தமை 500 மில்லியன் மக்கள் கொண்ட பாரிய சந்தையை கைப்பற்ற உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

'இலங்கை 2003ஆம் ஆண்டு 2,500 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற்றிருந்தது. 

2015ஆம் ஆண்டில், GSP+ வரிச்சலுகையை இழந்த நிலையில், 4,800 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றிருந்தது. 

எனினும், அதே வருடம் பங்களாதேஷ் வரிச்சலுகையை தனியாக அனுபவித்ததுடன், 26,000 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற்றுக்கொண்டது. 

அந்த நாட்டுக்கு பணப்பிரச்சினை இல்லை. ஆனால் எமக்கு உள்ளது' என்று தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.