உடல் உறுப்புகளை தானமாக வழங்க, சாரதிகளுக்கு சந்தர்ப்பம்
புதிய மாற்றங்களுடன் கூடிய சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பப் படிவம் மற்றும் புதுப்பித்தல் படிவம் என்பவற்றில் உடல் உறுப்பு மற்றும் இழையங்களின் தானத்துக்கு சம்மதம் தெரிவிக்கும் கூற்று ஒன்றினை உள்ளட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது, அவர் இதனைக் கூறினார் “புதிய யோசனையை உள்ளடக்கி மறுசீரமைப்பதற்கும், வீதி விபத்துமூலம் மூளைச்சாவு மற்றும் குருதிச்சுற்றோட்ட செயலிழப்புக் காரணமாக இறக்க நேரிடும் சாரதிகளிடமிருந்து அவர்களின் உடல் உறுப்பு மற்றும் இழையங்களை தானம் செய்வதற்குரிய சம்மதத்தினை பெற நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. த
ற்போதுள்ள சாரதி அனுமதி பத்திரத்தில் அதனைக் காட்சிப்படுத்தக் கூடியவாறு திருத்தி மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது” என்றார். இதேவேளை, இந்த யோசனையை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவே முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment