Header Ads



'அமெரிக்காவில் ஜனாதிபதிகள் மாறினாலும், இலங்கை பற்றிய கொள்கையில் மாற்றமில்லை'

அமெரிக்காவில் ஜனாதிபதிகள் மாறினாலும் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ஏஞ்சலா எக்லியர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்த பின்னர், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளராக ஏஞ்சலா எக்லியர் நியமிக்கப்பட்டார்.

பதவியேற்றுக்கொண்ட அவர் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்து இதனை கூறியுள்ளார்.

இலங்கை வந்த அவர் கடந்த 24 ஆம் திகதி ஊடகவியலாளர் குழு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தான ஆகியோரை தனித்தனியாக சந்தித்து தகவல் அறியும் சட்டம் மற்றும் இலங்கையில் ஊடக சுதந்திரம் சம்பந்தமாக விசாரித்து அறிந்துக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இலங்கை விஜயத்தின் இறுதியில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாக உதவி ராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.