சுமந்திரனைப் படுகொலை செய்யும் சதித் திட்டம், புலிகள் மீண்டும் ஒருங்கிணையும் அறிகுறி
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டதானது, சிறிலங்காவில் மீண்டும் விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
‘பயங்கரவாத தடுப்பு பிரிவும், ஏனைய புலனாய்வு பிரிவுகளும், நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். 2009 மே 19ஆம் நாள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், புலிகள் இயக்கத்தை மீளமைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
உயர்பாதுகாப்பு வலயங்கள், இராணுவ முகாம்கள், சோதனைச்சாவடிகள், படைப்பிரிவுகளை அகற்றுமாறு கோரி, அரசாங்கத்தின் பாதுகாப்பு வலையமைப்பை பலவீனப்படுத்துவதற்கு அனைத்துலக அரசாங்கங்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும், முயற்சிக்கின்றன.
போர் இல்லாத நிலையில் படைகளைக் குறைக்க கொடுக்கப்பட்ட அழுத்தங்களை நாம் எதிர்த்தோம். இதன் மூலம், படுகொலை முயற்சியை தடுக்க முடிந்துள்ளது.
ஈழக்கனவை நனவாக்குவதற்காக பலர் காத்திருக்கின்றனர். போரின் கருநிழல்கள் இன்னமும் கலையவில்லை. இன்னமும் அபாயம் உள்ளது.
பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற பாடத்தை அண்மைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment