அரசியல்வாதிகளுக்கு தரநிர்ணய நற்சான்று அவசியம் -- ஜனாதிபதி
அரசியல்வாதிகளுக்கு நற்சான்று பத்திரம் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
உற்பத்தி மற்றும் சேவைகளுக்கு தர நிர்ணய சான்றிதழ்கள் வழங்கப்படுவதனைப் போன்றே அரசியல்வாதிகளுக்கும் ஆண்டு தோறும் சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட வேண்டும்.
நாட்டு மக்கள் பொருட்கள் சேவைகளின் தரத்தைப் போன்றே அரசியல்வாதிகளின் தரம் பற்றியும் எதிர்பார்க்கின்றனர்.
அவ்வாறு அரசியல்வாதிகளுக்கு தரநிர்ணய நற்சான்று வழங்கினால் அதனை நிர்ணயம் செய்யும் பொறுப்பு உழைக்கும் மக்களிடம் வழங்கப்பட வேண்டும்.
நாட்டின் அனைத்து விடயங்களினதும் தரத்தை நிர்ணயிப்பதற்கு அரசியல்வாதிகள் முக்கிய ஏதுவாகின்றனர்.
அரசியல்வாதிகளின் தரம் குறைவாக காணப்பட்டால் ஏனைய விடயங்களில் தரத்தை எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்ததோர் கருதத்தை ஜானாதிபதி அவர்கள் முன் வைத்துள்ளார்.
ReplyDeleteமுஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இதே போன்று ஹலால் சான்றுப்பத்திரம் வழங்குமாறும் வேண்டுகிறோம்.