முஜிபுர் ரஹ்மானின், நியாயமான கேள்வி
- ARA.Fareel-
வன்னி மாவட்டத்தில் கலா போகஸ்வெவ எனும் பிரதேசத்தில் 3850 ஏக்கர் வனப்பிரதேசம் கடந்த கால அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டு மரங்கள் தறிக்கப்பட்டு 'நாமல் கம' என்று பெயர் மாற்றப்பட்டு தெற்கிலிருந்து மக்கள் குடியேற்றப்பட்டனர். இப்பிரதேசம் வன பிரதேசம் என வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்ட பிரதேசமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
இன்று வில்பத்து மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் தங்கள் பூர்வீக காணிகளில் மீள் குடியேறிய மக்களை எதிர்ப்பவர்கள் கடந்த கால ஆட்சியில் காடழிக்கப்பட்டு 5000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டபோது எங்கிருந்தார்கள்?
ஏன் மௌனம் காத்தார்கள்? சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புகள் எங்கிருந்தன? வில்பத்து பிரதேச முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை எதிர்ப்பதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
Post a Comment