Header Ads



தெளும்புகஹவத்தை கிராமத்தின், முதல் சட்டத்தரணி சல்மான் அமீன்


 -ஸப்ரான் சலீம்-

இம்மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற சட்டத்தரணிகளுக்கான சத்தியபிரமான நிகழ்வில் அக்குரணை, தெளும்புகஹவத்தையை சேர்ந்த சல்மான அமீன், இலங்கை சனநாயக சோசலிஷ குடியரசின் அதியுயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வானது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் ஏனைய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் கொழும்பு-12 இல் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.     

தெளும்புகஹவத்தை கிராமத்தின் முதல் சட்டத்தரணியான சல்மான் அமீன், தெளும்புகஹ்வைத்தை முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் கடுகஸ்தோட்டை சாஹிரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பாடசாலைக் காலம் முதலே பேச்சு, விவாதம் போன்றவற்றில் தந்தி திறமைகளை வெளிக்காட்டி பல தேசிய ரீதியான வெற்றிகளையும் பெற்று தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்தார்.

தெளும்புகஹவத்தையை சேர்ந்த மர்ஹூம் அமீன், பௌசியா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரான இவர், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் சிறந்த பெறுபேறை பெற்று 2013 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரியில் நுழைந்து நான்காண்டுகள் சட்டக்கல்வியை சிறப்பாக நிறைவு செய்தார்.

எல்லாம் வல்ல இறைவன் சட்டத்தரணி சல்மான் அமீன் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், தீர்க்கமான ஞானத்தையும் வழங்கி நாட்டிற்கும், சமூகத்துக்கும் சேவை செய்யும் வாய்ப்பை வழங்குவானாக.   

2 comments:

Powered by Blogger.