Header Ads



வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணிகளா..? முஸ்லிம் அரசியல்வாதிகள் கேள்வி


-சுஐப் எம் காசிம்-

வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது ஒட்டுமொத்தமான எதிர்ப்பை வெளியிட்டதோடு கண்டனத்தையும் தெரிவித்தனர்.

வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்கள் அங்கு சட்ட விரோதமாக குடியேறியுள்ளதாக  இனவாதிகள் மேற்கொண்டு வரும் தீவிரமான, பொய்யான பிரசாரம் தொடர்பிலும், வில்பத்து சரணாலயத்தை விஸ்தரித்து வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தப் போவதான ஜனாதிபதியின் அறிவிப்பினால் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப்போகும் பாதிப்புகள் குறித்தும் விளக்கும் செய்தியாளர் மாநாடு இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என் எம் அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான ஏ எச் எம் பௌசி, ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான், இஷாக் ரஹ்மான், எம் எச் எம் நவவி, மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷத், ஜனுபர், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆஷாத் சாலி, ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதிச் செயலாளர் தாசிம் மௌலவி மற்றும் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த சட்டத்தரணி ஷஹீட் ஆகியோர் உட்பட சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் இங்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறியதாவது,

1990 ஆம் ஆண்டு புலிகளால் அடித்து விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் தமது பரம்பரைக்காணிகளில் குடியேறும் போது இனவாதிகளும் இனவாதச் சூழலியலாளர்களும் அவர்களை கொடுமைப்படுத்துகின்றனர். தமது சொந்தக் காணிகளில் வளர்ந்திருக்கும் பற்றைக்காடுகளை அழித்துக் குடியேறும்போது வில்பத்தை அவர்கள் அழிக்கின்றார்கள் என்றும் இவர்கள் கூக்குரல் இடுகின்றனர். அப்படியானால் அவர்கள் கள்ளத்தோணிகளாக வந்தவர்களா? அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்தோ, பாகிஸ்தானிலிருந்தோ,  கொண்டுவரப்பட்டவர்களா? அப்படியில்லையென்றால்  அவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்களா? சூழலியலாளர்களிடம் இவற்றைக் கேட்கின்றேன். 
26 வருடக்களாக தென்னிலங்கையில் மூன்று பரம்பரையாக வாழும் இவர்கள் உடுத்த உடையோடு நிர்க்கதியாக வந்தவர்களே என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவர்கள் வாழ்ந்த காணிகள் பல்வேறு வழிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. அங்கு வாழ்ந்தோர் அவர்களின் காணிகளில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். இன்னும் சில காணிகள் புலிகளினால் சூறையாடப்பட்டு மாவீரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் எஞ்சியிருக்கும் காணிகளில் குடியேறும் போது தான் இனவாதிகளின் கொடுமை தாங்க முடியவில்லை.

புலிகளின் போராட்டத்திற்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்காததாலேயே அவர்கள் வெளியேற்றப்பட்டனர். புலிகளுடன் ஒத்துப் போயிருந்தால் அவர்களுக்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்காது. அரசாங்கமும், சகோதர சிங்கள மக்களும், மீள்குடியேற்றத்திற்கு தடை போடும் இனவாதிகளும் இந்த உண்மையை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். யதார்த்தத்தை விளங்காது இனவாதிகள் அமைச்சர் ரிஷாட்டும் முஸ்லிம்களும் காடுகளை அழிப்பதாக கூப்பாடு போடுகின்றனர்.

முஸ்லிம்கள் வில்பத்துக் காட்டை ஆக்கிரமிப்பதாக ஒரு பிரமையை ஏற்படுத்தி  சிங்கள சமூகத்தின் மத்தியில் ஒரு பிழையான கருத்தை விதைத்து வரும் இனவாதச் சூழலியாலாளர்களும், ஊடகங்களும் வவுனியா மாவட்டத்திலுள்ள வன பரிபாலனத் திணைக்களத்திற்கு உரித்தான  கலாபோகஸ்வெவ பிரதேசத்தில் அம்பாந்தோட்டையிலிருந்து மக்களைக் கொண்டுவந்து வீடமைத்துக் கொடுத்து, தொழில் வழங்கி, அங்கு குடியமர்த்தி ’’நாமல் கம’’ என்ற கிராமமாக அதனை ஆக்கியிருப்பதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கின்றனர்.

வில்பத்துக் காடழிப்புத் தொடர்பில் முஸ்லிம்களையும் அமைச்சர் ரிஷாட்டையும் குற்றஞ்சாட்டி வரும் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிற்கு இந்த விடயங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லையா? அல்லது இவர்கள் போன்ற அரசியல்வாதிகளின் பின்புலத்தில் இனவாதச் சூழலியலாளர்கள் தொழிற்படுகின்றனரா? இந்தச் சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது என்று தெரிவித்தார்.

9 comments:

  1. மாஷா அல்லாஹ் சந்தோஷமாக இருக்கிறது,இவ்வாறு எப்போதும் நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் பொது மக்களாகிய நாங்கள் எந்தக் கவாலையும் படாமல் உங்களுக்கு துஆ செய்துகொண்டு இருப்போம்,அமைச்சரும் மு,கா,தேசிய தலைவருமான ற,ஹகீம் அவர்கள் கலந்து கொள்ளவில்லையா?அல்லது அவர் வேறாக முயற்சி செய்கிறாரா? அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு தனி விளையாட்டு இனிமேல் செரிவாராது நம்மை அவர்கள் விளையாடி விடுவார்கள்,

    ReplyDelete
  2. Hello, where is he(Rauf?)................ Must be making deals with MR.

    ReplyDelete
  3. Hakeem is not politician,he is vote businessman.He is one of the person responsible for present problem.traditionally SLFP is anti Muslims and Muslims are UNPiers.Wiithout muslims support no any party can form the government.This trend is changed after Muslim congress and Ashraff ,Who contested on symbol tree(Muslim congress)and turned it as SLFP vote by supporting chandrika.So he strengthen SLFP.So after that UP could not come to power as it's votes base reduced.Also the behavior of Ashraff that time annoyed majority people and Buddhist Monk because his bullish attitude of King maker.So enraged Buddhist monk form the Hela Urumaya,BBS and Ravana balaya to counter MC.I do not think he is great leader because great leaders have vision that can see the future which he could not see the consequence.

    After the Mr. Ashraff's demise it is Mr.Rauf Hakeem started,he contested the general election on UNP and grabbed the Muslim UNP votes and turned it as a SLFP votes and strengthen the Mahinda and gave him a 2/3rd majority.He sold Muslim UNP votes for Minister post.Muslim Congress and it's leaders did nothing for the Muslim but gone after Minister post and created communal politics.

    Now we are loosing one by one after Muslim Congress and as we go for more.Now it is "SINGHELE" led by president backing BBS to go against Muslims.yes if we can start Muslimle(Muslim congress) why they cannot start Singhele.

    So Mr.Asraff and Mr.Hakeem are not great leaders but great dealers, who brought communal politics and destruction to Muslims,must be rejected.

    ReplyDelete
  4. Mr. Imthiyas Hussain, இலங்கையின் அரசியல் வரலாறு புரியாமல் UNP யின் மீது கொண்ட மோகத்தின் காரணமாக, மொட்டைத் தலைக்கும் முடங்காலுக்கும் முடிச்சி போடுகிண்றீர்கள். அநாகரீக்க தர்மபால தொடக்கம் ( 1864 - 1933; 1915 கலவரம் ) ஞான சாரார் வரை முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள துவேஷ குழுக்களும் இயக்கங்களும் இருந்துதான் வருகிறது. 1977 - 1994 வரையும் உங்களின் UNP தான் ஆட்சி செய்தது. இந்த காலகட்டத்தில் நடந்த சில விடயங்களை சீர்தூக்கி பாருங்கள். மாவட்ட அபிவிருத்தி சபை, வட்ட மேசை மகாநாடு, தமிழ் பயங்கர வாதிகளால் ஏட்பட்ட அனைத்து அழிவுகளையும் கண்டும் காணாமல் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்க தவறியமை, இலங்கை இந்திய ஒப்பந்தம்.. இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். உங்களது பிரேமதாசாவை (1988, சந்திரிக்கா 1994) தொடர்ந்தும் ஆட்சியில் அமர உதவியவர் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களே. இந்த உங்களது UNP ஆட்சியில் தான் முஸ்லிம்கள் தனித்து விடப்பட்டார்கள். கேட்பதட்கு நாதியற்றவர்கள் ஆனார்கள். முக்கியமாக வடகிழக்கில். அந்த சந்தர்ப்பத்தில் மிகவும் சாணாக்கியமாக முஸ்லிம்களை அரசியல் தலைமை ஏற்று வழிநடத்தியவர் தான் அஷ்ரப் அவர்கள். அஷ்ரப் சிறந்த அரசியல் தலைவர் என்பதை நீங்கள் கூற தேவை இல்லை, அதை சிங்களவர்களும் , தமிழர்களும் ஏன் அரசியல் விட்பண்ணர்கள் கூறுவார்கள்.

    தயவு செய்து ஹக்கீமின் அரசியலை வைத்துக் கொண்டு முஸ்லிம்களின் அரசியலை அளவீடு செய்ய வேண்டாம். இப்போதும் உங்கள் UNP மந்திரிமார் தான்; சட்டம் ஒழுங்கு, நீதி போன்றவற்றுக்கு பொறுப்பானவர்கள். ஞான சாரர் எவ்வளவு அடாவடி தனம் செய்தும் வெளியில் தான் இருக்கிறார்.

    கடைசியாக நீங்கள் கூறும் UNP யும் SLFP யும் ஒன்றாக சேர்ந்துதானே இப்போது ஆட்சி செய்கிறார்கள். இதட்கு நீங்கள் கூறும் விளக்கம் என்ன?? அரசியலில் நிறைய நீங்கள் பயணிக்க வேண்டும்.

    ReplyDelete
  5. Mr. Imthiyas Hussain, இலங்கையின் அரசியல் வரலாறு புரியாமல் UNP யின் மீது கொண்ட மோகத்தின் காரணமாக, மொட்டைத் தலைக்கும் முடங்காலுக்கும் முடிச்சி போடுகிண்றீர்கள். அநாகரீக்க தர்மபால தொடக்கம் ( 1864 - 1933; 1915 கலவரம் ) ஞான சாரார் வரை முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள துவேஷ குழுக்களும் இயக்கங்களும் இருந்துதான் வருகிறது. 1977 - 1994 வரையும் உங்களின் UNP தான் ஆட்சி செய்தது. இந்த காலகட்டத்தில் நடந்த சில விடயங்களை சீர்தூக்கி பாருங்கள். மாவட்ட அபிவிருத்தி சபை, வட்ட மேசை மகாநாடு, தமிழ் பயங்கர வாதிகளால் ஏட்பட்ட அனைத்து அழிவுகளையும் கண்டும் காணாமல் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்க தவறியமை, இலங்கை இந்திய ஒப்பந்தம்.. இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். உங்களது பிரேமதாசாவை (1988, சந்திரிக்கா 1994) தொடர்ந்தும் ஆட்சியில் அமர உதவியவர் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களே. இந்த உங்களது UNP ஆட்சியில் தான் முஸ்லிம்கள் தனித்து விடப்பட்டார்கள். கேட்பதட்கு நாதியற்றவர்கள் ஆனார்கள். முக்கியமாக வடகிழக்கில். அந்த சந்தர்ப்பத்தில் மிகவும் சாணாக்கியமாக முஸ்லிம்களை அரசியல் தலைமை ஏற்று வழிநடத்தியவர் தான் அஷ்ரப் அவர்கள். அஷ்ரப் சிறந்த அரசியல் தலைவர் என்பதை நீங்கள் கூற தேவை இல்லை, அதை சிங்களவர்களும் , தமிழர்களும் ஏன் அரசியல் விட்பண்ணர்கள் கூறுவார்கள்.

    தயவு செய்து ஹக்கீமின் அரசியலை வைத்துக் கொண்டு முஸ்லிம்களின் அரசியலை அளவீடு செய்ய வேண்டாம். இப்போதும் உங்கள் UNP மந்திரிமார் தான்; சட்டம் ஒழுங்கு, நீதி போன்றவற்றுக்கு பொறுப்பானவர்கள். ஞான சாரர் எவ்வளவு அடாவடி தனம் செய்தும் வெளியில் தான் இருக்கிறார்.

    கடைசியாக நீங்கள் கூறும் UNP யும் SLFP யும் ஒன்றாக சேர்ந்துதானே இப்போது ஆட்சி செய்கிறார்கள். இதட்கு நீங்கள் கூறும் விளக்கம் என்ன?? அரசியலில் நிறைய நீங்கள் பயணிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. குருவி! எந்தக்கட்சி நல்லம் எந்தக்கட்சி மோசம் என்பதை விட எல்லாமே வியாபாரம்தான் என்பதை ஞானிபோல் பேசும் நீங்கள் புரியாமல்..
      அதுசரி நம்ம முஸ்லிம் அரசன் மற்றும் சிற்றரசர்களுக்கெல்லாம் இந்த இலாபகரமான வியாபாரத்துக்கு முதலீடு செய்து வேதம் ஓதி வழிகாட்டியவர் யாரப்பா? புரிஞ்சா சரி.

      Delete
  6. HELLO ,let us go back one thousand years , did we get
    here with VISA ? Or did the Sinhalese get here with
    VISA ? ALL ARE KALLATHONI !

    ReplyDelete
  7. Mr.Kuruvi.I am not a UNPier.I am SLFpier before I move to middle east and I never voted for UNP.I do not say UNP did good for the Muslims but generally it is minority people's party and SLFP was created by S.W.R.D.Bandaranayake on the slogan of racism.ever since it is created and it is in the power minorities are attacked. Their business place are attacked.During the time of Srimavo Bandaranayaka so many business places of Muslims were took over by the government in the name nationalization.Such as JB textiles,Bhuhari hotel and other places.But none Muslims business places were not taken.After the UNP government won Mr.J.R.Jayawardena returned those places to the Muslim owners back.Again Under Rajapaksha attacking and burning of muslim business places started.Now too there are no UNP government but SLFP government led by Mr.Maithri.He is Mahida's man not common candidate.He deceived 6.2 million voters.Now what is happening is he is attacking those who voted against SLFP and Mahinda.The puravesi balaya leader Prof. Wijesuriya,who firmly stood to defeat Mahinda and bring MR.Maithri was issued summons for 1000 million defemation case.Another is Mr. Rishad so he too under attack shows that it is SLFP government not UNP.

    When talk about Mr.Ashraff that he understood the mistake he made he changed Muslim congress name to shelve the communal identity.But already damage is done and it is too late.As I am reading all three language news papers I saw how the Buddhist monk and Sinhalese are so and so angry and said he and Muslims are getting more favor than Sinhalese.Also his arrogant bullish behavior as he made main party leaders to go after him to form a government made to think of sinhala parties such as hela Urumaya and other racist parties to form political parties other than main parties.

    Now ask mr. Kuruvi, what we gained through Muslim congress other than racist parties and vote businessmen who are jumping here and there for the sake of ministry post annoying majority people saying Muslim leaders are always ministers.I am not unpier but what I want to say is because of Muslim congress racist SLFP got upper hand.

    ReplyDelete

Powered by Blogger.