Header Ads



அரசாங்கம் கடுமையாக அச்சமடைந்துள்ளது - மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாரஹென்பிட்டி அபயாராமய விஹாரையின் பீடாதிபதி முரத்தட்டுவே ஆனந்த தேரரின் 74ம் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் சில கேள்விகளை மஹிந்தவிடம் கேட்ட போது அவர் பதிலளித்திருந்தார்.

கடந்த சில தினங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்கின்றனர்.

என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

ஆளும் கட்சியில் அங்கம் வகிப்போரே என்னிடம் வந்து கூறுகின்றார்கள் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என நாம் கூறியிருந்தோம்.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் எங்கு செல்கின்றார்கள் என்பது குறித்து புலனாய்வுப் பிரிவினர் ஊடாக கண்காணிக்கப்படுகின்றது.

அரசாங்கம் கடுமையாக அச்சமடைந்துள்ளது.

நாட்டில் தற்போது நிதி அமைச்சர் ஜனாதிபதியாகவும், ஜனாதிபதி நிதியமைச்சராகவும் செயற்படுகின்றார்கள்.

அராசங்கம் அர்ஜூன் அலோசியஸை பாதுகாத்து வருகின்றது என மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.