Header Ads



பௌத்த விகாரையில், தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான முகாம் நிகழ்வு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தர்காநகர் கிளை நடத்திய இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றைய தினம் (01.01.2017) தர்காநகர், அபகஹந்திய பௌத்த விகாரையில் சிறப்பாக நடைபெற்றது. 

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை நாடு முழுவதும் செய்து வரும் தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் ஒன்றாக இரத்ததான முகாம்களையும் நடத்தி வருகிறது.

முஸ்லிம்கள் தீவிரவாதிகள், இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் அமைதி மார்க்கம் என்பதை பிரச்சாரத்தினூடாக மாற்று மத மக்கள் மத்தியில் கொண்டு செல்வதைப் போல், இரத்ததானத்தின் மூலமும் கொண்டு சென்று சேர்க்கும் பணியை செய்கிறது தவ்ஹீத் ஜமாஅத்.

அந்த வகையில் கடந்த 01.01.2017 அன்று தர்காநகர், அபகஹந்திய பௌத்த விகாரையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தர்கா நகர் கிளை நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்.


2 comments:

  1. Alhamdulillaah....!
    ohhhh..better not seem this new by Aasaath Saali & Co..

    ReplyDelete
  2. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).
    (அல்குர்ஆன் : 2:177)

    ReplyDelete

Powered by Blogger.