"அந்த கழுதையை வரச் சொல்"
அரச அதிகாரிகள் முதுகெழும்பை நிமிர்த்தி வேலை செய்ய வேண்டும் என, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அஷோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
அத்துடன், அரச அதிகாரிகள் தமது ஆணைக்கு அடிபணியும் ஏதோ ஒரு விலங்குகள் போல, சில அமைச்சர்கள் எண்ணியிரு ப்பதா கவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"அந்த கழுதையை வரச் சொல்" என்றதும் ஓடிவரும் அரச அதிகாரிகள் சிலர் உள்ளதாக இதன்போது குறிப்பிட்ட அஷோக பீரிஸ், அச் சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் "அவர் என்றால் கழுதைதான்" எனத் தான் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
அப்போது, குறித்த அமைச்சர் ஏன் அவ்வாறு கூறுகின்றீர் என வினவியதற்கு "கழுதை இல்லை எனில் கழுதையை வரச் சொல் என்று அழைத்ததற்கு அரச அதிகாரி வந்திருக்க மாட்டானே.." என தான் பதிலளித்தாகவும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் உள்ளிட்ட அதிகாரிகள் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் செயற்பட்ட விதத்திற்கு பலர் மகிழ்ச்சி வௌியிட்டு ள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment