Header Ads



சாய்ந்தமருதில் விபத்துக்குள்ளான குடும்பத்தினரின், அவசர வேண்டுகோள்

-jemzith jem-

சாய்ந்தமருதில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதுடன் ஏனையோர் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இடம்பெற்ற கோரமான வாகன விபத்தில் உயிரிழந்த சிறுவர்கள் மற்றும் படுகாயமடைந்த பெண்கள் இரத்த வெள்ளத்தில் கோரமாக கிடக்கும் புகைப்படங்களை சிலர் வட்ஸ்சப் மற்றும் முகப்புத்தகங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இது, சம்மந்தப்பட்ட குடும்ப உறவினர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிப்பதுடன் அவற்றை அல்லாஹ்வுக்காக உடனடியாக அகற்றுமாறு சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நமது குழந்தை, நமது தாய், நமது சகோதரி எவருக்காவது இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் உடல் சிதைந்து- இரத்த வெள்ளத்தில் கோரமாக நடு வீதியில் கிடந்தால் அதனை நாம் புகைப்படம் எடுத்து காட்சிப்படுத்துவோமா?

இப்படியான புகைப்படங்களை பத்திரிகை மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சமூக வலைத்தளங்களில் அவரவர் எதை வேண்டுமானாலும் போடலாம் என்கிற நிலை காணப்படுகிறது. இந்த சிந்தனை நம்மவரிடத்தில் மாற வேண்டும்.

பிற்குறிப்பு - இதுபோனற புகைப்படங்களை ஜப்னா முஸ்லிம் இணையம் ஒருபோதும் பதிவேற்றுவதில்லை எனவும், ஊடக தர்மங்களுக்கு கட்டுப்ட்டே எமது இணையம் செயற்படுகிறது எனவும் வாசகர்களுக்கு மீண்டும் ஞாபகமூட்டுகிறோம்.

4 comments:

  1. நிச்சயம் இவ்வேண்டுகோளை கருத்திலெடுப்பது சிறந்தது...

    ReplyDelete
  2. Correctly said. When a close relative of mine passed away on a accident, all what our brothers did was taking photos, whilst women from Majority community stepped in to help. this has to change.

    ReplyDelete
  3. Android phones in hand,,, most of them keep taking photo everything.. only remaining place is toilet.

    You have no right to publish the immage of others without their permission in worldly level. BUT If you are Practicing Muslim.. one step further.. You will not point your camera accept for what is an in evitable situation.

    Having a camera phone dose not give us right to take photo of everything what we see.. There are issues related to the life and likes of other people. So fear Allah and use your camera only for what is vital for ours and others life only.

    ReplyDelete
  4. அவைகளை காட்சிப்படுத்தும் நோக்கில் பதிவேற்றங்கள் செய்யப்படவில்லை.அதிகமான உறவினர்களுகு முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தான் தகவல் அறியமுடிந்துள்ளது. அந்த நோக்கில்லலாதவர்கள் தயவுசெய்து நீக்கி விடுதல் நல்லது

    ReplyDelete

Powered by Blogger.