Header Ads



அரபியர்களை அதிரச் செய்திருக்கும் பாடல் - உலகளவில் பரபரப்பு, கடுமையான விமர்சனங்கள்..!!

ஆண்களையும் ஆணாதிக்கத்தையும் விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அரேபியப் பாடல் காட்சியொன்று உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கவலைகள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் காணொளி, பெண்களைக் கட்டுப்படுத்தும் சவுதி அரேபிய அரசின் சட்டங்கள் கேலிசெய்யும் வகையில் அமைந்துள்ளன.

சவுதியில் பெண்கள் கார் செலுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கேலி செய்யும் வகையில், பெண்கள் அடங்கிய கார் ஒன்றை சிறுவன் ஒருவன் செலுத்துவது, பொம்மைக் கார் ஒன்றை ஒரு பெண் செலுத்துவது, சக்கரங்கள் பொருத்திய காலணிகளைப் பெண்கள் அணிந்துகொண்டு வீதியில் சுற்றிவருவது போன்ற மேலும் பல காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்களை மனதளவில் நோயாளியாக மாற்றும் ஆண்கள் அழிந்து போக வேண்டும் என்பதான பாடல் வரிகள் சவுதி அரேபியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

மேலும், முஸ்லிம்களுக்கும் பெண்களுக்கும் எதிரானவராகச் சித்திரிக்கப்படும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் உருவப்படமும் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் வெளியானதையடுத்து உலகளவில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.