Header Ads



அழிவடையுமா BBS..? பலர் எம்மை கைவிட்டுவிட்டதாக என ஞானசாரர் புலம்பல்

பலர் எம்மை கைவிட்டு சென்று விட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நுகேகொடை பிரதேசத்தில் நேற்று -07- மாலை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

எமது போராட்டத் தோழர்கள் பலர் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள். அவர்கள் மேலும் சின்னஞ் சிறிய கடைகள் பலவற்றை போட்டுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கு பொதுபல சேனாவை அழிக்கும் தேவை காணப்பட்டது. ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் அதே தேவை காணப்பட்டது.

யாருடன் இணைந்து செயற்படுவது எவ்வாறு தேசிய வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பது என்பதில் எமக்கு பிரச்சினை உள்ளது.

விழுந்த இடத்திலிருந்து எவ்வாறு எழுவது என்பது தொடர்பில் குழப்ப நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.

சிங்கள பௌத்தர்கள் நாட்டை ஆட்சி செய்வதாக தென்பட்டாலும் உண்மை நிலைமை அதுவல்ல. அதுவே இன்று நாட்டின் பிரதான பிரச்சினையாக அமைந்துள்ளது.

சிங்கள பௌத்த தலைவர்களை வழிநடத்துவதும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதும் எதிரி சக்திகளேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. இன்ஷா அல்லாஹ், இதைவிட இன்னும்பல இழிவுகளை சந்திப்பார்கள்.

    ReplyDelete
  2. Eveything by drama.dont take it easy.BEHIND THE BBS ISREAL IRAN AND RECIST THERE.THEY WILL START OTHER GAME.

    ReplyDelete
  3. We don't want to be happy but we should change our selves to be stronger our Eeman.
    Now, our Muslim brothers will be ready to neglect our Islam and will be ready forget our prayers because our headache ganasara leaving BBS.

    Remember dear brothers.
    We should be ready to face a big challenges in the future. I think Bbs is being ready for that. It's single symptom that ganasara leaves BBs.
    Let's make stronger our eeman to face a big challenge in the future.
    Let's pray Allah and let's unite.

    ReplyDelete
    Replies
    1. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
      (அல்குர்ஆன் : 9:24)

      Delete
    2. Yes. Correct. This is what happens now in the world. Our eeman is too delicate. Let's make stronger our eeman. Then it's easy to face every problem in the world. Let's unite.

      Delete
  4. என்ன Plan "B" தயாரிக்காங்க போல, அல்லாஹ்வின் உதவியால் எல்லாம் தோல்வியில் தான் முடியும் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  5. இவன் பேசிய முழுமையான உரையை நான் சிங்களத்தில் கேட்டேன் அதில் முஸ்லிம்களுக்கு சில சாதகமான கருத்துக்களையும் சில வெறுப்படைந்த பாணியிலும் பேசினான் ஆனால் அவனது நகர்வு மிகவும் கவனமாக அவதானிக்கப்பட வேண்டியது காரணம் இவன் அமைதியாக இருந்து மற்றவர்களைத் தூண்டி இவனின் மீது பழிவருவதில் இருந்தும் தப்ப திட்டம் தீட்டலாம் இதைத்தான் 1915ல் இந்தியாவில் இருந்து கொண்டு ஒருவன் செய்தான் அவனை இன்றும் அரசும் பெரும்பான்மை மக்களும் பௌ;த்த மதத்தின் காப்பாளராக புகழ்கின்றனர் Allah
    முஸ்லிம்களை காபிர்களின் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாப்பானாக

    ReplyDelete
  6. இந்த ஆசாமி உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைகளும்,செயற்பாடுகளும் மிகச்சூழ்ச்சிகரமானது.எனவே எமது சமூகம் எப்பொழுதும் மிக மிக விழிப்புடனும் உறுதியான ஈமானுடனும் குறைந்தது ஐவேளைத்தொழுகைகளில் பிரார்த்திக்க வேண்டும்.இவர் பதுங்குவது பாய்வதற்காக.கவனம் முஸ்லிம் சமூகம்.

    ReplyDelete

Powered by Blogger.