Header Ads



புத்தர் சிலைகளை உடைத்தவர்களை கண்டுபிடிக்க 8 பொலிஸ் குழுக்கள் - விஹாரைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு

புத்தர் சிலைள் உடைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நோக்கில் எட்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும் சில புத்தர் சிலைகள் மற்றும் விஹாரைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

கிழக்குப் பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைய திருகோணமலைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் பெரேராவின் மேற்பார்வையில் விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொண் குடம் என்ற மாதிரித்தான்
    கதையாக இருக்கின்றது.
    எத்தனை பள்ளிவாசல்கள் தேவாலயம் கோயில்கள் என்பன தாக்கப்பட்டது போது எந்தக்
    குழுக்கள் எத்தனை குழுக்கள் போட்டார்கள் இதுதான் இனவாதம்.

    ReplyDelete
  2. ஐந்து வேளை தொழும் பள்ளியை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை ஆனால் ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஆறு ஏழு பேர் கூடி அதிலும் இரண்டாக பிரிந்து அடிதடியுடன் கலைந்து ஒருசிலர் வைத்தியசாலையிலும் மற்றும் சிலர் பொலிசியில் போய்ச் சேர்வார்கள் அதற்கு ஆறு படைப்பிரிவு.வாழ்க நல்லாட்சி அல்லது ஒழிக,

    ReplyDelete

Powered by Blogger.