அக்கரைப்பற்றைச் சேர்ந்த 7 பேர் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் - மூவர் பெண்கள்
இம்மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்ற சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏழு பேர் சட்டத்தரணிகளாக (Attorney-at-Law) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
இந்நிகழ்வானது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவான் மற்றும் ஏனைய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் கொழும்பு-12 யில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் (Supreme Court Complex) நடைபெறவுள்ளது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையான சட்டத்தரணிகள் சத்திப்பிரமாணம் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள சட்டத்தரணிகள் விபரம்..
1. முஹம்மது மீராசாஹிப் றதீப் அஹமட்
2. ஆதம்லெப்பை ஆஸாத்
3. பதுர்டீன் முஹம்மது சகீக்
4. இஸ்ஸதீன் ரஸா அஹமட்
5. அபுல்காசிம் பாத்திமா சஸ்னா
6. முஹம்மது நபீல் ரிகாஷா
7. செயிட் அஹமட் சஸ்னா
மேலும், இம்முறை வெளியான உயர்தர பரீட்சை முடிவுகளின் படி அக்கரைப்பற்று பாடசாலைகளில் நான்கு பேர் மருத்துவத்திற்கும், ஐந்து பேர் பொறியியல் துறைக்கும் ஏனைய துறைகளிலும் பலரும் தெரிவு செய்ப்பட்டிருந்தமையும் சிறப்பம்சமாகும்.
இவர்கள் அனைவரும் தாம் கற்ற பாடசாலைக்கும் பிறந்த ஊருக்கும் தான் சார்ந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் நற்பிரஜைகளாக வர வாழ்த்துகிறோம்.
Mashallah, really good. It reminds me late 70s and 80s when, there was no political backing or interference, students studied very hard to get into universities from Akkaraiapttu. Then, there was a political backing from local politician. Then people stopped studying hard and looked for short cuts to achieve their aspirations. Now there is a political vacuum. People started to study again. We have to maintain this trend among our community. We need political backing while maintaining high level of hungry for education.
ReplyDelete