Header Ads



இப்லீசின் 6 சதிவலைகள்!

(1) முதலாவது அல்லாஹ் மற்றும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களின் கட்டளைகளுக்கு மாற்றமாக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி அதன் மூலம் இணைவைப்பு செய்து மற்றும் இறைக்கட்டளைகளைப் புறக்ணித்து குஃபஃரான காரியங்களைச் செய்யத் தூண்டுவது!

இதில் இப்லீஸ் வெற்றியடைந்தால் அந்த மனிதனை தன்னுடைய படையில் சேர்த்து சத்தியத்தில் இருக்கின்ற மற்ற மனிதர்களுக்கு எதிராக இவரைத் திருப்பி விடுகின்றான்.

(2) முதல் முயற்சியில் தோல்வி அடைந்த இப்லீஸ் தன்னுடைய இரண்டாவது முயற்சியாக தனக்கு விருப்பமான பித்அத்களை மார்க்கம் என்ற பெயரால் செய்வதற்கு தூண்டுகின்றான். ஏனெனில் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் புதுமையைப் புகுத்துவதன் மூலம் அந்த வழிகேட்டினைச் செய்ய வைத்து அவனை நரகத்திற்கு சொந்தக்காரனாக்கி விடுகின்றான்.

இதில் இப்லீஸ் வெற்றி கண்டால் இந்த புதுமையைப் பரப்புபவர்களில் ஒருவனாக அவனை ஆக்கிவிடுகின்றான்.

(3) ஒருவர் ஷிர்க் மற்றும் பித்அத்களை புறக்கணித்து வாழ்வதில் உறுதியுடையவராக இருந்தால், அதில் தோல்வி அடையும் இப்லீஸ் அதோடு நின்றுவிடுவதில்லை! மூன்றாவதாக அவரை மற்ற பெரும்பாவங்களைச் செய்வதற்கு தூண்டுகின்றான்.

(4) அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி பெரும்பாவங்களை விட்டும் தவிர்ந்து வாழக்கூடிய அடியானாக அவன் இருந்தால் நான்காவது முயற்சியாக அவனை சிறு பாவங்களைச் செய்வதற்குத் தூண்டுகின்றான்.

சிறு பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டே வரும் ஒருவனின் தீமைப்பதிவேட்டின் கணத்தைக் கூட்டுவதன் மூலம் அவனது மறுமை வாழ்வை சிதைப்பது தான் இப்லீசின் எண்ணம்!

(5) ஒரு அடியான் சிறு பாவங்கள் செய்வதைக் கூட தவிர்ந்து வாழ்பவனாக இருப்பின் அதில் தோல்வி கண்ட இப்லீஸ் அத்தோடு நின்றுவிடாமல் ஐந்தாவது முயற்சியாக ஒருவனை மறுமையில் எவ்வித தண்டனையோ அல்லது நன்மைகளையோ பெற்றுத்தராத அதே நேரத்தில் மார்க்கம் தடை செய்யாத செயல்களைச் செய்வதில் அவனை மூழ்க வைக்கின்றான். அதன் மூலம் அவன் மறுமை வாழ்வு சிறக்க செய்ய வேண்டிய சிறந்த அமல்களைச் செய்வதை விட்டும் அவனைத் தடுக்கின்றான்.

(6) இதிலும் ஒரு அடியான் உறுதியாக இருப்பின் இப்லீஸ் தனது ஆறாவது முயற்சியாக குறைந்த நன்மைகளைத் தரக்கூடிய அமல்களை மிகப்பெரிய அமல்களாக அந்த அடியானுக்கு காட்டி அதிலேயே அவனை மூழ்க வைத்து அதன் மூலம் அளப்பரிய நன்மைகளைத் தரக்கூடிய அமல்களைச் செய்வதை விட்டும் அவனைத் தடுக்கின்றான்.

இந்த சதிவலையில் அநேகர் விழுந்து விடுவர்! ஏனெனில் அவர்களின் நம்பிக்கை என்னவெனில் ஷைத்தான் எப்போதுமே நன்மையான காரியத்தை ஏவமாட்டான் என்பது! இறையருள் உடையவர்கள் மட்டுமே ஷைத்தானின் இந்த சதிவலையை உணர்ந்து அளப்பரிய நன்மைகளைத் தரும் மற்ற அமல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்குவர்.

ஒரு அடியான் ஷைத்தானின் மேற்கண்ட ஆறு சதிவலைகளிலிருந்தும் இறையருளைக் கொண்டு தன்னைக் காத்துக் கொண்டான் எனில், இப்லீஸ் தன்னுடைய படைகளையும் மனிதர்களில் தன்னைப் பின்பற்றியவர்களையும் ஏவிவிட்டு இறைவனின் ஏவல் விலக்கல்களை முறையாகப் பேணி வாழும் அந்த அடியாரை ‘வழிகெட்டவர்’ என்றும் ‘மார்க்கத்திற்கு முரணானவர்’ என்றும் மக்கள் முன் பறைசாற்றி அவரை விட்டும் மக்களை தூதமாக்கி அதன் மூலம் அவரின் போதனைகள் மக்களைச் சென்றடையாமல் இருக்கச் செய்வதோடல்லாமல் அவரையும் பலவீனப்படுத்தி இப்லீஸைப் பின்பற்றுபவர்களை பலப்படுத்துகின்றான்.

எப்போதாவது ஒரு முஃமின் இப்லீசின் விடாத முயற்சியால் சோர்வடைந்து விட்டால் அவனை மீண்டும் தன் வலையில் இழுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவன் தன்னுடைய பட்டாளத்தோடு முழு வீச்சில் எந்நேரமும் செயல்பட்டுவருவதால் ஒரு முஃமின் அவன் இறக்கும் வரையிலும் இப்லீசோடு போர் புரியும் நிலையிலேயே இருக்க வேண்டியதிருக்கிறது!  – தப்ஸீர்' இப்னு கைய்யூம் ரஹ்மதுல்லாஹி அலைஹி.

Suvanathendral

16 comments:

  1. Dear writer

    Did saithan come out and revealed his five plans? Or did Allah revealed these conspiracies through his messenger Gibreal (al sal)

    Pls don't mislead our community with fake stories.

    ReplyDelete
    Replies
    1. Brother Assalaamu Alaikum.. This is not a story. This is all about the ways and means how shaithaan plot to distract Muslims from good.

      Allah has given you the sense to think & contemplate.

      Delete
  2. [6:29AM, 21/01/2017] Zayan Mohamed:
    மஷா அல்லாஹ்
    நல்ல விஷயம் 1).அல்லாஹ் அல்லாத எதனையும் கலிமா சொன்ன யாரும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொட்டு இன்று வரை வேரொருவரையும் வண்ங்கவில்லை. மாறாக அல்லாஹ்வுக்கு உருவம் கொடுத்தவர்கள்,அல்லாஹ் நம்மைப் போன்று அர்ஷிலே உக்கார்ந்துகொண்டிருக்கிறான் என்று ஷைத்தானின் வழியை பின்பற்றக்கூடியவர்கள் இருக்கிரார்கள்.
    அது மாத்திரமல்ல
    2) கண்மனி முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை படைக்கும் போது ஒப்பாரிவிட்டு அழுதவனும் ஷைத்தான் அதனால் அதே அவனுடைய கொள்கையை பின்பற்றி வாழும் சிலர்கள் முஹம்மத் நபியவர்களின் பிறந்த மாதம் வந்துவிட்டால் அவர்களைப் புகழ்ந்து பாடும் போது வேண்டாம் என்று ஒப்பாரி சத்தம்.
    அன்னவர்கள் மீது ஸலவாத் ஓதும் மஜ்லிசுகளைக் கண்டால் ஷைத்தானின் ஒப்பரி.
    3)இந்த ஷைத்தான் ஸிக்ரு மஜ்லிஸுகலைக் கண்டால் அதை தடை செய்ய ஒப்பாரி.
    அல்லாஹ் குர்ஆனில் ,
    அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை ஸிக்ரு செய்வதுகொண்டு உங்கள் கல்புகள் அமைதி பெருகின்றன.
    என்று கூருகிறான்.
    நல் அமல்கள் செய்யும் போதெல்லாம் ஷைத்தான் வந்து அது ஷிர்கு ,பித்அத்து,கூடாது என்ரெல்லாம் சொல்கிறான்.
    மனித ஷைத்தான்கலாக வஹ்ஹாபி எனும் பெயர் பெற்றவர்கள்தான் அதிகம்.என்வே நாம் முதல் கவன்மாக இருக்க வேண்டியது அவசியம்.
    அல்லாஹ் நம் அனைவரையும் நல் அமல் செய்யும் சுன்னத் ஜமாதினரின் கூட்டத்தில் வாழ்வைப்பாயாக, நல அமல்கலை தடுக்க வரும் சைத்தானின் கூட்டத்தை விட்டும் எங்கலை பாதுகாப்பாயாக ஆமீன்

    அதேபோல் நல்லோர்கள் சென்ற வழியைத்தான் நாங்கள் 5 நேரமும் சூரா பாத்திஹா ஓதுவதுகொண்டு துஆ கேட்கிறோம் .அதை கேட்குமாறு அல்லாஹ்தான் நமக்கு சொல்லித்ந்துள்ளான்.
    யா அல்லாஹ் நபிமார்கள் சுஹதாக்கள் அவ்லியாக்கள் சித்தீக்கீங்கள் ,ஸாலிஹீங்கள் பாதையை எங்களுக்கு காட்டித்தருள்வாயாக ஆமீன்.

    ReplyDelete
  3. சுன்னத் என்று சொல்லிக்கொண்டு நபி அவர்கள் சொல்லாதவற்றை செய்தால் அதுதான் சைத்தானின் வழிகள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.மௌலூதும்,மீளாத்து விழாவும் நபி யாருக்காவது கொண்டாடாடினார்களா,மூஸா நபிக்காக யஹூதிகள் நோன்பு நோற்றதை பார்த்த நபி அவர்கள் உங்களை விட நாங்கள் தான் நோன்பு பிடிக்க மிகவும் தகுதியானவர்கள் என்று சொன்னார்கள்.அதே போல் யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் நபிமார்களின் கபுருகளை கொண்டாடும் இடமாக தெரிவு செய்ததையும் நபி அவர்கள் நாங்களும் உங்களை விட அந்த நபிமாரை கொண்டாட அதிகமான உரிமையுடையவர்கள் என்று சொல்ல வில்லையே.ஏன் நோன்பை மாட்டும் சொன்னவர்கள் இந்த பிறந்த நானையும் சொல்லவில்லை மாறாக யூதர்க்களும் கிரிச்தவர்களும் நாசமாகட்டும் என்று சொன்னார்கள் காரணம் அவர்கள் தங்கள் நபிமார்களின் கபுரை வணங்கும் கொண்டாடும் குதூகலிக்கும் இடமாக மாற்றிக்கொண்ட காரணத்தால் சொல்லார்கள்.அவ்வாறு சொல்லி தடுத்ததை நாம் ஏன் செய்ய வேண்டும் அது தப்பு என்று சொன்னால் அவர்களை சைத்தான் என்று சொல்லும் பாரிய சைத்தான்கள் நம் மத்தியில் நடமாடும் இப்லீஸ்கல் என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  4. சுன்னத் என்று சொல்லிக்கொண்டு நபி அவர்கள் சொல்லாதவற்றை செய்தால் அதுதான் சைத்தானின் வழிகள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.மௌலூதும்,மீளாத்து விழாவும் நபி யாருக்காவது கொண்டாடாடினார்களா,மூஸா நபிக்காக யஹூதிகள் நோன்பு நோற்றதை பார்த்த நபி அவர்கள் உங்களை விட நாங்கள் தான் நோன்பு பிடிக்க மிகவும் தகுதியானவர்கள் என்று சொன்னார்கள்.அதே போல் யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் நபிமார்களின் கபுருகளை கொண்டாடும் இடமாக தெரிவு செய்ததையும் நபி அவர்கள் நாங்களும் உங்களை விட அந்த நபிமாரை கொண்டாட அதிகமான உரிமையுடையவர்கள் என்று சொல்ல வில்லையே.ஏன் நோன்பை மாட்டும் சொன்னவர்கள் இந்த பிறந்த நானையும் சொல்லவில்லை மாறாக யூதர்க்களும் கிரிச்தவர்களும் நாசமாகட்டும் என்று சொன்னார்கள் காரணம் அவர்கள் தங்கள் நபிமார்களின் கபுரை வணங்கும் கொண்டாடும் குதூகலிக்கும் இடமாக மாற்றிக்கொண்ட காரணத்தால் சொல்லார்கள்.அவ்வாறு சொல்லி தடுத்ததை நாம் ஏன் செய்ய வேண்டும் அது தப்பு என்று சொன்னால் அவர்களை சைத்தான் என்று சொல்லும் பாரிய சைத்தான்கள் நம் மத்தியில் நடமாடும் இப்லீஸ்கல் என்பதுதான் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாத்தை உரிய முரையில் படித்தால் விளக்கம் கிடைக்கும்
      நாங்கள் ஒவ்வொரு திங்கட் கிழமை நோன்பு நோற்பது எதற்காக ? நான் அன்ருதான் பிறந்தேன் நோன்பு நோற்கிரேன் என்ரார்கள் செய்யிதினா முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்.
      பிறந்த நாளைக்காக நோன்பு நோற்று சஹாபாக்கலுக்கும் நோன்பு பிடிக்குமாரும் ஏவினார்கள் அன்னல் நபி அவர்கள்.
      கலிமா சொன்ன யாரும் யாரையும் வண்ங்கிய சரித்திரம் இல்லை .ஆனால் அன்பியாக்கல் அவ்லியாக்கலுக்கு கன்னியம் செலுத்தும் மக்களைப் பார்த்து ஷிர்கு என்ரும் பித்அத் என்ரும் சொல்லும் வஹ்ஹாபிகலை உன்மையில் முஸ்லிம் என்று எப்படி சொல்வது.
      அன்பியாக்கள் அவ்லியாக்கலின் கப்ருகலை பரகத்து நாடி முத்தமிட்டவர்கலைப் பார்த்து கப்ரு வண்ங்கிகள் என்ரால் யார் குற்றவாலிகள்.
      இதோ சில கேள்விகள்
      முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்கல் மதீனா நகர் சென்ற போது ஸெய்யிதினா அபூ ஐயூபில் அன்ஸாரி வீட்டில் தங்கினார்கள்.
      அன்னலாரின் மறைவுக்கு பிறகு கன்மனி அலைஹிஸ்ஸலாது வஸஸலாமின் கப்ரை முகத்தை வைத்து பிரட்டி பிரட்டி முத்தமிட்ட சரித்திரம் தெரியாதா? அவர்களுக்கு கப்ரு வன்ங்கியென்ரு சொன்னார்கலா?
      அதுபோல் அல்லாஹ்வின் கஃபா கல்லாலும் மன்னாலும் கட்டப்பட்டது.பரகத்துக்காக முத்தமிட்டவர்கள் கோடான கோடி இன்னும் முத்தமிடுகிரவர்களையும் பார்த்து கல் வணங்கி என்று சொவதா???
      அல்லது அல்லாஹ்வின் குர்ஆன் வெரும் எளுத்தும் கடதாசியுமாக இருக்கிரது பரகத்திற்கு முத்தமிடுபவர்களை குர்ஆன் வண்ங்கி என்று சொல்வதா?? எம்மை பெற்ற பெற்றோர்கலை பாசத்தால் முத்தமிடுவதைப் பார்த்து பெற்றோர் வணங்கி என்று சொல்வதா???
      இல்லை . படித்ததில் தவரு சிந்திப்பதில் தவரு , எண்ணங்கலில் தவரு. மொத்தத்தில் அன்பியாக்கலின் அவ்லியாக்கலின் அந்தஸ்து அவர்கலின் இரகசியம் புரியாமல் வஹ்ஹாபி எனும் கூட்டத்தில் பிறந்த வழிகெட்ட மக்களின் கொள்கையில் வந்த மக்கள்தான் சுன்னத் ஜமாதினரப் பார்த்து கப்ரு வணங்கி என்று சொல்வார்கல் என்பதை படித்துக் கொள்ளுமாரு அன்பாய் வேண்டிக்கொல்கிரோம்.

      Delete
    2. ஒவ்வொரு வியாளக்கிழமையும் நோன்பு பிடிப்பது உண்டு அதைபோல் மாதத்தில் மூன்று நோன்பு இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.தான் பிடித்த முசலுக்கு மூணு கால் என்று எத்தனை வருடம் வாதாடினாலும் முயலுக்கு நாலு கால்கள் தான் உண்மை,

      Delete
  5. Brother Zayan, may Allah bless u , These Wahhabis is The very big tool of Shaitan Through with he misguides the people from real path of Islam in the name of Shirk and Bidaa, at the end they will raise the slogan of kufr against the Umma and fight same like what happens in Syria and Egypt.

    ReplyDelete
  6. சகோதரர் ZAYAN MOHAMED நீங்கள் கூறுவது போன்று இஸ்லாத்தை உரிய முறையில் படித்தால் முழுமையான விளக்கம் கிடைக்கும் அது உண்மைதான் நாம் உண்மையான இஸ்லாத்தை அதாவது அல்லாஹ் தனது திருமறையில் கூறியதையும் அவானுடைய தூதர் (ஸல்)அவர்களும் சொன்ன செய்த.அங்கிகரித்த விடயங்களை செரியாக படித்தால் உண்மையான இஸ்லாம் விளங்கும்,நமக்குள் இத்தனை ஜமாஅத் தேவைப்படாது,ஆனால் நாம் செய்வதல்லாம் முற்றும் முழுதாக நபியுடைய வழிமுறைக்கு மாறாக நடப்பதற்கு ஆதாரம் தேடுகிறோமே தவிர ஆதாரத்தோடு இருக்கும் நல்லமல்களை செய்வதற்கு முயற்சி எடுப்பதில்லை.
    நீங்கள் கூறினீர்கள் நபியவார்கள் ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்டார்கள் என்று உண்மைதான் அதனால் நாமும் முத்தமிடுகிறோம்.அந்த நபியாலேயே புகளப்பட்ட அல்லாஹ் உமரின் நாவில் பேசுகின்றான் என்று கூறினார்கள் அதே உமர் (றலி) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஹஜ்ருல் அஸ்வத்தை பார்த்து நீ ஒரு கல், நபிகள் நாயகம் (ஸல்)அவார்கள் உன்னை முத்தமிட்டதால் நானும் முத்தமிட்டேன் இல்லையன்றால் நீ ஒரு கல்லுத்தான் என்றார்கள்.2நபியவர்கள் அபூ ஐயூப் அன்ஸாரி(ரலி)அவர்களின் கப்ரை தரிசித்து முத்தமிட்டார்கள்,அந்த அன்சாரி சஹாபி செய்த உபகாரத்தை நினைத்தே அவ்விடத்தில் முத்தமிட்டு அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிராத்தித்தார்களே தவிர தனது தேவைகளை அந்த கபுரில் இருக்கும் அன்சாரீ ஸஹாபியிடம் உதவி கேட்கவில்லை,நீங்கள் கூறுவது போன்று அவ்லியாக்களை மதிக்க வேண்டும்.அந்த அவ்லியா யார் என்பது யாருக்கு தெரியும் அல்லாஹ்வும் அவான் தூதரும் இன்னார் நல்லவர் என்று சான்று பகர்ந்து இருந்தால் நாமும் சொல்ல முடியும்,செரி அப்படித்தான் அல்லாஹ்வும் அவான் தூதரும் குறிப்பிட்டு சொன்னாலும் அவ்வாறானவர்களின் கப்ரடியில் கந்தூரி கொடுக்கவும்,கொண்டாடவும்,மௌலூதுகள் ஓதவும் யாராவது சொன்னார்களா? நபிக்கு பின்னால் வஹியுடை காலம் முடிந்துவிட்டது தற்போது வஹி வர வேண்டிய அவசியமும் இல்லை,காரணம் நம் கைவசம் பூரணப்படுத்தப்பட்ட இஸ்லாம் குர்ஆனும் நபி வாழியும் கையில் உள்ளது,குறிப்பிட்ட ஒருவரை அவ்லியா என்று யாருக்கும் யாரையும் சொல்ல முடியாது தற்போது கப்ருகளில் அதிகமான அவ்லியாக்கள் அடங்கப்பட்டு இருக்கலாம்.நடமாடு இப்போதைய உலகில் அவ்லியாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதற்காக அவர்களை வழிபடவோ அவார்களின் பின்னால் போகவோ வேண்டிய அவசியம் இல்லை.மாறாக அல்லாஹ் பயந்து அவான் நம்மீது கடமையாக்கியவைகளை செவ்வன செய்தால் தானும் ஒரு இறை நேசன்தான் அவ்லியாதான்,அதல்லாமல் ஒரு குறிப்பிட்டவர் அல்லது குறிப்பிட் குடும்பம் பரம்பரை பரம்பரையாக அவ்லியாக்கள் என்று முட்டால் தனமாக சான்றிதழ் வழங்க முடியாது,பொதுவாக இறையச்சம் யாரிடம் இருக்குமோ அவர்தான் அல்லாஹ்வின் நேசத்துக்கு உரிய அவ்லீயா,அல்லாஹ் தன் திருமறையில் நபியே கூறுவீராக.நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள்,அப்படி என்றால் நபியை பின்பற்ற அல்லாஹ் கூறுகிறான்.இப்போது நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.நபி எதனை காட்டினார்கள் எதனை தடுத்தார்கள் ஸுன்னத்வல் ஜமாஅத்.ஜமாஅத்தே இஸ்லாம்.தௌஹித் ஜமாஅத் இதுவல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.நபியவார்கள் பிறந்தநாள் கொண்டாடினார்களா,அவருக்கு முன்னுள்ள நபிமார்கள் அவ்லியாக்கள் உ+ம் லுக்மான் ஹகீம் துல்கர்னைன்ஷாபோன்றோருக்கு மௌலூது ஓதினா ர்களா? அல்லது எனக்கு முன்னுள்ள நல்வர்களுக்காக பிறந்த நாளும்,மௌலூதும் ஓத முடியாமல் போய்விட்டது ஆகவே நீங்கள் சோய்யுங்கள் என்று ஏதாவது ஒரு ளைபான ஹதீஸாவது இருக்கிறதா?

    ReplyDelete
  7. தொடர்ச்சி,சகோதரரே தற்காலத்தில் நம்மவர்களால் இனகாணப்பட்டு அவ்லியா என்று கூறி முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் ஷாஹுல் ஹமீது பாஷா போன்றறோருக்கு மௌலூது ஓதுவது ஏன் அவர்கள் சொன்னார்களா?அல்லது இஸ்லாத்தில் எங்காவது சொல்லப்பட்டு இருக்கிறதா?இவர்கள் அவ்லியாதான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.ஆனால் அல்லாஹ் அடித்துச் சொல்லும் நல்லோர்களான நூஹ் (அலை) .இப்றாஹீம்,(அலை),இஸ்மாயீல்.இஸ்ஹாக்.,யஃகூப்,மூஸா,ஈஸா (அலை)அவர்கள் பேரில் யாரும் எந்த மௌலூதும் ஓத தயார் இல்லை காரணம் அவர்களைப்பற்றி இல்லாத பொல்லாதவற்றை அள்ளி வீச முடியாது அவர்கள் பற்றிய தெளிவான விளக்கங்கள் அல்லாஹ்வும் அவன் தூதரும் சொல்லிவிட்டார்கள் அதனால் மக்களின் மனதில் எந்த கப்ஸாவும் ஏறாது.வயிற்றுப் புளப்புக்கு செரிவராது என்பது மட்டுமல்லாமல் பயமு கூட நபிமார்கள் விடயத்தில் விளையாட.ஒரு முஸ்லிம் முஸ்லிமாக வாழ்ந்து சொர்கம் போக எத்தனையோ நல்லமல்கள் இருக்கும் போது இவ்வாறான பித் அத்களை கொண்டு சொர்க்கம் போகலாம் என்று சொல்லும் நம்மில் உள்ள சகோதரர்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்,யாரையும் வெறுப்பூட்டுவதற்காகவும்,இதை விட்டால் எதோ நாம் தோற்றுப் போனவர்கள் என்று மக்கள் கூறுவார்கள் என்று இந்த உலகத்தாரை பயப்படும் நம்மவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் தண்டானையை பயந்து கொண்டால் மிகவும் நல்லது,

    ReplyDelete
    Replies
    1. well said brother... may almighty Allah bolster all of us in immaculate Islam !

      Delete
    2. Bro Mustafa Jawfar. Ma sha Allah well said! Allah reward you bro.

      Delete
  8. well explained Mr. Jawfer. jazakumullah khaira.

    ReplyDelete
  9. Looks like Rasool (Sal) was in born in 2 days or 3 days in month Because he fast mondays and Thursday's not only Mondays some hadeeth says he fasted 3 days in a month without specifiying the days
    If you love prophet try to implement his sunnah in action not by celebrating his birth.
    Birth day கொண்டாடி , கந்தூரி, பாத்திஹா ஓதி பிழைப்பு நடத்தும் கூட்டம் தமது நடவடிக்கையை சாதகமாக்கிக்கொள்ள மாரக்கத்தை திரிபுபடுத்தி சொல்வார்கள்.
    அவ்வாறுதான் Zayan உம் ...
    நபி (ஸல்) அவர்கள் திங்கள் மற்றும் வியாழன் நோம்பு வைத்தார்கள் காரணம் அந்த நாட்களில் தான் நமது நன்மை தீமை அல்லாஹ்விடம் எடுத்துச்செல்லப்படுகின்றன.
    இரண்டாவது அவர் பிறந்தது திங்கட்கிழமை என்பதாலும்...
    நபியவர்கள் வருடத்திற்கு ஒருமுறை ஒரு திங்கட்கிழமை நோன்பு நோற்றிருந்தாலாவது சொல்லலாம் நாம் அவரது Birth day ஐ கொண்டாடலாம் என்று... மேலும் நபியவர்கள் திங்கள் ,வியாழன் நோம்பு நோற்றார்களே தவிர விழா எடுத்து கூத்துப்போடவும் இல்லை அப்படி கூத்துப்போடச்சொல்லி எங்களை தூண்டவும் இல்லை. உண்மையில் நாங்கள் நபியவர்களை நேசிப்பவர்கள் என்றால் அவர் செய்ததை செய்வோமே தவிர செய்யாத ஒன்றை செய்யவுட்மாட்டோம் அடுத்தவர்களை செய்ய சொல்லிதூண்டவும்மாட்டோம்.

    Hadeeths follows.
    1.It was narrated that Abu Hurayrah (may Allaah be pleased with him) said: “My close friend [the Prophet (peace and blessings of Allaah be upon him)] advised me to do three things which I will not give up until I die: fasting three days of each month, praying Duha, and sleeping after Witr. Narorated by al-Bukhaari, 1124; Muslim, 721.
    2.
    2. It was narrated from Mu’aadhah al-‘Adawiyyah that she asked ‘Aa’ishah, the wife of the Prophet (peace and blessings of Allaah be upon him), “Did the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) fast three days of every month?” She said, “Yes.” She said to her: “Which days of the month did he fast?” She said, “He did not mind which days of the month he would fast.” Narrated by Muslim, 1160.
    3.1 – It was narrated from Abu Qataadah al-Ansaari that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) was asked about fasting on Mondays. He said: “On that day I was born, and on it the Revelation came to me.” Narrated by Muslim, 1162.

    ReplyDelete
  10. எல்லா இயக்கங்களும் ஆசைப்படுவது நமது இயக்க வாதிகள் அனைவரும் சொர்க்கம் போக வேண்டும்,இது சிறப்பான விடயமாக இருந்தாலும் மற்றவர்கள் நரகம் போக வேண்டும் என்று எதிர் பார்ப்பது போன்ற நிலைப்பாடுதான் இந்த முடிவு இயக்க வெறிகளை களைந்து வரட்டு கௌரவத்தை விட்டுகொடுத்து நாம் எல்லாம் கலிமா சொன்ன மக்கள் முஹம்மத் நபியின் உம்மத் அனைவரும் சொர்க்கம் போக வேண்டும் என்று நினைத்தால் நேரடுயாக அல்லாஹ்வும் அவன் தூதரும் சொர்க்கத்துக்கு போவதற்கான வழியை தேர்ந்து எடுத்து பின்பற்றுவதுதான் உண்மையான முஸ்லிமுக்கும் சார்ந்த அமைப்பை வழி நடத்தக்கூடியவர்களுக்கும் சிறந்த நடத்தை இதை விடுத்து ஆளாளை குறை கூறி தூற்றுவதால் நாம் இலகுவாக சொர்க்கம் போக முடியாத நிலையே ஏற்ப்பட்டு விடும் அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.