Header Ads



இவ்வருடம் ஹஜ் செல்வோரிடமிருந்து, 50.000 ரூபாவை முற்பணமாக அறவிட திட்டம்

-விடிவெள்ளி-

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்துள் விண்­ணப்­ப­தா­ரிகள் ஹஜ் கட­மைக்­காக தெரிவு செய்­யப்­பட்டால் அவர்கள் தமது பய­ணத்தை உறுதி செய்­வ­தற்­காக மீளப்­பெற்றுக் கொள்ளும் வகையில் 50 ஆயிரம் ரூபா முதற் கட்­டணம் அற­வி­டப்­ப­டு­மென அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னரும் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்­சரின் பிரத்­தி­யேகச் செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம். பாஹிம் தெரி­வித்தார்.

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில்,

‘அற­வி­டப்­படும் முற்­கட்­டணம் அவர் பய­ணிக்கும் முக­வ­ருக்குச் செலுத்த வேண்­டிய கட்­ட­ணத்­தி­லி­ருந்து குறைக்­கப்­படும். இதே­வேளை முற்­கட்­டணம் செலுத்­திய ஒருவர் தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளினால் பய­ணத்தை மேற்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்டால் அக்­கட்­டணம் உட­ன­டி­யாக அவ­ருக்குத் திருப்பி வழங்­கப்­படும்.

 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்­கான அறி­வு­றுத்தற் கூட்­டங்கள் எதிர்­வரும் மார்ச் மாதம் முதல் மாவட்ட ரீதியில் நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. அக்­கூட்­டங்­களின் போது விண்­ணப்­ப­தா­ரிகள் தமது பய­ணத்தை உறுதி செய்ய வேண்டும்.

ஹஜ் கட­மைக்­காக சிலர் பல­ரது பெயர்­களை திணைக்­க­ளத்தில் பதிவு செய்­துள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. ஹஜ் கட­மையை இவ்­வ­ருடம் எண்­ணி­யி­ருக்­கா­த­வர்­களின் பெயர்கள் கூட பதிவு  செய்யப்பட்டுள்ளது.

எனவே ஹஜ் கடமை நிறைவேற்றுபவர்கள் தங்களது பயணத்தை கட்டாயமாக உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.