5,000 ரூபாய் நாணயத் தாள், இரத்து செய்யப்படும்..?
கடந்த ஆட்சியின் போது கொள்ளையடித்த பணத்தை கொண்டே, சமகால அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் ஐயாயிரம் ரூபா நாணயத்தாளை இரத்து செய்தால் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள், தானாகவே தவிர்க்கபடும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தற்போது மாற்றத்திற்கான ஆரம்பம் என்ற தலைப்பில் போராட்டங்கள், பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
கடந்த காலத்தில் கொள்ளையிடப்பட்ட அரச சொத்துக்களின் மூலம் சேர்க்கப்பட்ட கறுப்புப் பணத்தினூடாகத்தான் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த கறுப்புப் பணத்தை கொண்டே ஆர்ப்பாட்டத்திற்காக ஆட்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கான உணவு உட்பட்ட பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
இலங்கையில் 5,000 ரூபாய் நாணயத் தாள் இரத்து செய்யப்படும் பட்சத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் இந்த போராட்டங்கள் முடிவிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை ஐயாயிரம் நாணயத்தாள் விரைவில் ரத்துச் செய்யப்படும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5000/ரூபாவை இரத்துச் செய்ய வேண்டும் என்று வருடக்கணக்கில் சொல்லி வந்தால் அவர்கள் அதை வைத்துக் கொண்டா இருப்பார்கள்,இப்போதே எல்லாம் சில்லறையாக்கப்பட்டு இருக்கும்,அப்படியே இரத்துச் செய்தாலும் மிஞ்சி இருக்கும் ஏனைய மக்களையும் ஒன்று சேர்த் அதற்கும் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் .இதற்கெல்லாம் ஒரே வழி அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப ஊழல்வாதிகள் ,கள்ளர்கள் கொலைகாறர் அனைவரையும் பிடித்து தண்டனை கொடுத்தால் செரியாகும்
ReplyDelete