Header Ads



திருமலையில் 4 புத்தர் சிலைகள் உடைப்பு, இராணுவப் பாதுகாப்புக்கு உத்தரவு

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. சிங்கள நாளிதழான திவயின இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

வடக்கு- கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகள் மற்றும், வீதியோரங்களில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலையில் கடந்த வாரம் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தை அடுத்தே, விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்க இராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும், திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

2 comments:

  1. What about other religion temples????

    ReplyDelete
  2. It's the duty of the government to give full security, because they cannot protect them self from the vandalism.

    ReplyDelete

Powered by Blogger.