Header Ads



44 இலட்சம் பெறுமதியான தொலைபேசிகளுடன், கார் கடத்தல் - சந்தேகநபர்களை தேடி வலைவிரிப்பு

களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த அலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர், தனது கார் மற்றும் 44 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலைபேசிகள் மற்றும் 7 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றுடன் கட்த்திச் செல்லப்பட்டு கொலன்னாவை பிரதேசத்தில் கைவிடப்பட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

களுத்துறைக்குச் சென்ற நிலையில், நான்கு பேர் அடங்கிய குழுவினரால் குறித்த  அலைபேசி விநியோக பிரதிநிதி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவரிடமிருந்த பணம், அலைபேசிகள் மற்றும் கார் என்பவற்றை கடத்திச் சென்றவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், சந்தேகநபர்களை தேடி வலைவிரித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். 

No comments

Powered by Blogger.