துருக்கியில் பயங்கரவாத தாக்குதலில் 40 பேர் மரணம் - இலங்கை கண்டனம்
இஸ்தான்புல்லில் உள்ள இரவு கேளிக்கையகம் ஒன்றில் நிகழ்ந்த தாக்குதலில் 16 வெளிநாட்டினர் உள்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி 01.30 மணிக்கு ரீய்னா இரவு கேளிக்கையகத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை இன்னும் போலிசார் தேடி வருவதாக அமைச்சர் சுலேமான் சொய்லு தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நிகழ்ந்து பல மணி நேரங்கள் கழித்தும் தாக்குதல்தாரி எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 69 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தீவிரவாதியை தேடும்பணி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் அவரை பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சொய்லு கூறியுள்ளார்.
2
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள Reina Club இல் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்ததுடன் 40 மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் குறித்த இரவு விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
புத்தாண்டை கொண்டாட அனைவரும் கூடியிருந்த வேளை இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இஸ்தான்புல்லில் ஆயிரக்கணக்கான பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் மகிஷினி கொலன்னே குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இந்த தகவலை பதிவேற்றம் செய்துள்ளார்.
Post a Comment