3 ஷிஆக்களுக்கு மரண தண்டனை
2014 ஆம் ஆண்டு நடைபெற்றதொரு குண்டு தாக்குதலில் 3 காவல்துறையினரை கொலை செய்தது தொடர்பாக 3 ஷியா செயற்பாட்டாளர்களுக்கு பஹ்ரைன் அதிகாரிகள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.
சுன்னி முஸ்லிம்களால் ஆளப்படும் நாட்டில் ஆறு ஆண்டுகளில் மரண தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை.
இது சர்வதேச சட்டங்களை மீறுகின்ற அவமானமிக்க செயல்பாடு என்று சர்வதேச மனித உரிமைகள் குழுவான "ரிப்ரைவ்" கூறியுள்ள நிலையில், இந்த மரண தண்டனையை நீதிக்கு புறம்பான கொலை என்று ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் டாக்டர் ஆக்னஸ் கலமார்டு விவரித்துள்ளார்.
இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்திகள் வெளிவந்த பின்னர் போராட்டக்காரர்களும், துக்கம் அனுசரிப்போரும் ஷியா மக்கள் வாழும் கிரமங்களின் வீதிகளில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
Post a Comment