Header Ads



31 ஆயிரம் மில்லியன் ரூபா மோசடி, குற்றவாளிகளை பாதுகாக்கும் பிர­தமர் பதவி விலகவேண்டும்

அர்ஜுன மகேந்திரனின் மருமகனின் நிறுவனம் 21 மாத காலத்தில் 31 ஆயிரம் மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளது. இந்நிலையில் தவறு செய்தவர்களை இந்த அரசாங்கம் தண்டிக்குமென தாம் நம்பவில்லையென எதிர்க்கட்சி பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மோசடிகாரர்களை தண்டிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மோசடிகாரர்களை பாதுகாப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

திறைசேரி முறி தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய  அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஆட்சியில் மோசடி செய்தவர்கள் தப்பிச்செல்ல முடியாதவாறு விமான நிலையங்களை மூடிவிடுவதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் ஆட்சி மாறி 50 நாட்களில் பாரிய மோசடி இடம்பெற்றது. மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்குவதாக கூறிய இந்த அரசாங்கம் திருடியவர்களை தண்டிக்காது மோசடிகளை நிறுத்தப் போவதில்லை.

அமைச்சரவையினதோ, நிதி அமைச்சினதோ, அனுமதியின்றியே திறைசேரி முறி கொடுக்கல், வாங்கல்கள் நடைமுறைகள் மாற்றப்பட்டன. பிரதமரின் ஆலோசனைப் படியே இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அர்ஜுன மகேந்திரன் சாட்சியளித்திருந்தார்.

இந்த மோசடியை மறைக்கவே சட்டத்தரணிகளடங்கிய குழு நியமிக்கப்பட்டது. மோசடியை மூடி மறைக்க முடியாத வகையில் கோப் குழு செயற்பட்டது. 2015 பெப்ரவரி முதல் 2016 மே வரை பேர்பசுவல் கம்பனி 14,100 கோடி பெறுமதியான திறைசேரி முறிகளை கொள்வனவு செய்தது.

இந்தக் கம்பனி சார்பில் வேறு கம்பனிகள் 8600 கோடி பெறுமதியான முறிகளை கொள்வனவு செய்தது. மொத்தமாக 23 ஆயிரம் கோடி திறைசேரி முறியை இந்த கம்பனி கொள்வனவு செய்துள்ளது. அவற்றில் 95 வீதமானவை சேமலாப நிதியத்ததிற்கு மீள விற்கப்பட்டுள்ளது.

2010 நவம்பரில் நடந்த நிதிச் சபையில் இது பற்றி ஆராயப்பட்டது. சேமலாப நிதியத்திற்கு இந்த கொடுக்கல் வாங்கலினால் 14.9 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக நிதிச் சபை அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் அது மறைக்கப்பட்டது. பேர்பசுவல் நிறுவனம் 21 மாத காலத்தில் 13,000 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளது.

‘குடு’ விற்று கூட இவ்வளவு அவசரமாக இலாபமீட்ட எந்த கம்பனியாலும் முடியாது. 2 வருட காலத்தில் இந்த கம்பனியின் சொத்து பெறுமதி 1853 வீதத்தினால் அதிகரித்துள்ளது. திறைசேரி முறி மோசடியினால் ஒரே நாளில் 1677 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டது.

மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே பாது­காத்து வரு­கின்றார். ஆகையால் இந்த பிர­தமர் தலை­மை­யி­லான அர­சாங்கம் இருக்கும் வரைக்கும் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­மாட்­டார்கள். ஆகவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது பத­வியில் இருந்து உடன் விலக வேண்டும்.

1 comment:

  1. The so-called prime minister must be questioned intensively about his alleged involvement in central bank's embezzlement.

    ReplyDelete

Powered by Blogger.