தொழுகையாளிகளே, உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள். தொடர் - 2
-அஸ்ஹர் ஸீலானி-
7- அடியான் அல்லாஹ்விற்கு மிக நெறுக்கமாக
இருக்கின்றான் என்ற நற்செய்தி:
"ஒரு அடியான் தனது ரப்புக்கு மிக நெறுக்கமாக இருக்கும் சந்தர்பம் ஸுஜுதாகும், எனவே அதில் பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம்: 1111).
8- தொழுகை இஸ்லாத்தின் தூன் என்ற சுபச்செய்தி:
"காரியங்களுல் தலையாயது இஸ்லாம், இஸ்லாத்தை ஏற்றவர் ஈடேற்றம் பெற்று விட்டார், அதன் தூன் தொழுகை" என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆன் இப்னு ஜபல் (ரலி) அவர்கள், அஹ்மத்-22121).
9- தொழுகை பேரொளி என்ற நன்மாராயம்:
"தொழுகை பேரொளி" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிகுல் அஷ்அரிய் (ரலி) அவர்கள், முஸ்லிம்: 556 ).
10- தொழுகை நயவஞ்சத்தன்மையிலிருந்து பாதுகாக்கும்
என்ற சுபச்செய்தி:
"நயவஞ்சகர்களுக்கு பஃஜ்ர், இஷா தொழுகையை போன்று சிறமமான வேறு எந்தத் தொழுகையும் இல்லை. அந்த இரு தொழுகைகளுக்கு கிடைக்கும் நற்கூலிகளை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்த நிலையிலாவது வந்து அதில் கலந்துகொள்வார்கள்" என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி: 657).
11- இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை என்ற சுபச்செய்தி:
"எவர் இஷா தொழுகையை கூட்டாக நிறைவேற்றுவாரோ அவர் இரவின் ஒரு பகுதியையும், அவர் பஃஜ்ர் தொழுகையையும் கூட்டாக நிறைவேற்றும்போது முழு இரவும் நின்று வணங்கிய நன்மையை பெற்றுக்கொள்கின்றார்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அப்ஃபஃன் (ரலி) அவர்கள், முஸ்லிம்: 1523).
12- தொழுகை நரக நெறுப்பிலிருந்து பாதுகாக்கும் என்ற நன்மாரயம்:
'சூரிய உதயத்திற்கு முன்னும், சூரிய மறைவிற்கு முன்னும் தொழுகையை நிறைவேற்றும் எவரையும நரகம் தீண்டாது' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: ருஎய்பா (ரலி) அவர்கள்: முஸ்லிம் 1469).
இந்த ஹதீஸ் குறிப்பிடுவது: பஃஜ்ருத் தொழுகையும், அஸர் தொழுகையுமாகும்.
13- தொழுகையில் ஸுஜுதின் போது நெற்றிபட்ட இடம் நரக
நெறுப்பு தீண்டாது என்ற நற்செய்தி:
'.......நரகவாசிகளில் தான் நாடிய சிலரைத் தனது கருணையினால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். அதன்படி அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காமல் இருந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" என்று உறுதி கூறியவர்களில், தான் கருணை காட்ட நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணையிடுவான். நரகத்திலிருக்கும் அவர்களை அவர்களது ஸஜ்தாவின் அடையாளங்களை வைத்து வானவர்கள் இனம் கண்டு கொள்வார்கள். மனிதனி(ன் நெற்றியி)ல் உள்ள ஸஜ்தாவின் அடையாளத்தைத் தவிர மற்றப்பகுதிகளை நரகம் தீண்டுகிறது. ஸஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆவே, அவர்கள் அங்கமெல்லாம் கருத்து விட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அப்போது அவர்கள் மீது உயிர் நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் உழு நிலத்தில் விதைப்பயிர் முளைத்தெழுவதைப்போல் (புதுப்பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள்......". (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், ஆதராம்: முஸ்லிம்: 469).
14- தொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களில் இருந்து
தடுக்கும் என்ற சுபசோபனம்:
'நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும், தீமையையும் விட்டும் தடுக்கும்'. (அல் அன்கபூத் 29: 45).
15- தொழுகை நீங்கள் அல்லாஹ்விடம் உதவி பெறுவதற்கு உள்ள
சிறந்த ஊடகம் என்ற நன்மாரயாம்:
'நீங்கள் பொறுமையைக்கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்' (அல்பகரா 2: 45).
'நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக்கொண்டும், தொழுகையைக் கொண்டும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்'. (அல்பகரா 2: 153).
16- தனியாக நிறைவேற்றப்படும் தொழுகையை விட கூட்டாக
நிறைவேற்றப்படும் தொழுகைக்கு கிடைக்கும் சுபசோபனம்:
'தனித்துத் தொழுவதை விட கூட்டாக தொழுகையை நிறைவேற்றுவது இருபத்தேழு மடங்கு நன்மையை உங்களுக்கு பெறுக்கித்தரும்' என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவாகள், முஸ்லிம்: 1510).
17- 'தொழுகையாளிக்கு வானவர்கள் அல்லாஹ்விடம் அருள் வேண்டி
பிரார்த்திக்கின்றனர் என்ற நன்மாராயம்:
'உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் இடத்தில் வுழூ முறிந்துவிடாமல் அமர்ந்திருக்கும் காலமெல்லாம், வானவர்கள் அவருக்காக அல்லாஹ்விடம் யா அல்லாஹ்! அவரது பாவங்களை மன்னிப்பாயாக! யா அல்லாஹ் அவருக்கு அருள் புரிவாயாக! என்று பிரார்த்தித்துக்கொண்டிருப்பர்' என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், ஆதராம்: புஹாரி: 445).
தொடரும்...............
Post a Comment