மகிந்தவுக்கு எதிரான வழக்கு, மார்ச் 28 இல் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் பிரசாரங்களுக்காக பஸ்களை பயன்படுத்தி செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் மகிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயற்குழு ஆகிய தரப்புக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொழும்பு வணிக மேல்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
வழக்கு தொடர்பிலான பிரதிவாதங்களை முன்வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் மார்ச் 28 திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.
மார்ச் மாதம் உள்ளுராட்சி தேர்தல் வேலையை ஆரம்பிக்க இருப்பதால் அதற்கும் சேர்த்து இதை போட்டு இருப்பார்கள்
ReplyDelete