யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் அலுவலகம் - 26 ஆம் திகதி திறக்கப்படுகிறது
யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவால் திறந்துவைக்கப்படவுள்ளது.
வடபகுதி மக்கள் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு இதுவரை காலமும் கொழும்புக்குச் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நல்லூர் திருவிழா காலத்தின் போது வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது. இதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கொன்சியூலர் பிரிவு இங்கு ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாவட்டச் செயலகத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட கட்டிடத்தில் கொன்சியூலர் பிரிவுக்கு இடம் ஒதுக்கப்பட்டு, அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலர்களுக்கான நேர்முகத் தேர்வும் கடந்த வருடம் நவம்பர் மாதம் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
மேலும், புதிய அலுவலகம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment