21 முஸ்லிம் எம்.பிக்கள் இருந்தபோதிலும், ஒற்றுமை இல்லை - ஹிஸ்புல்லாஹ்
சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்கள் மறந்து ஒன்றுபட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. வில்பத்து, பொத்தானை போன்ற சம்பவங்கள் அதற்கு சிறந்த உதாரணங்களாகும். இவ்வாறான முஸ்லிம் விரோத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவற்றுக்கு அரசியல் ரீதியில் நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். நாடாளுமன்றத்தில் 21 முஸ்லிம் எம்.பிக்கள் இருந்த போதிலும் எம்மிடையே ஒற்றுமை இல்லை. அதனாலேயே இந்நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு பிரச்சினையும் ஒவ்வொருவரும் தனித்தனியாக பேசுவதால் எந்த பலனும் - தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
இந்நிலை மாற வேண்டும். வில்பத்து, பொத்தானை மாத்திரமல்ல முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து பிரச்சினைகளையும் பொதுவான பிரச்சினையாக பார்த்து அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு நாங்கள் ஒன்றுபட்டால் மாத்திரமே எமக்கு எதிரான சவால்களை முறியடித்து நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்களை மறந்து ஒன்றினைவது சமூக நோக்கத்துக்காகவே. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக அல்ல. தேர்தல் வரும் போது அவர் அவர் தத்தமது கட்சிகளினூடாக அரசியல் மேற்கொள்ளட்டும். ஆனால், சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஒற்றுமையாக எதிர்கொள்வதே காலத்தின் தேவையாகவுள்ளது.
இது தொடர்பில் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஒற்றுமையை அது வலியுறுத்த வேண்டும். அதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். – என்றார்.
Everybody is not perfect including you mr. Hisbulla. We should remove those Muslim ministers in the next election and should be selected faithful, perfect human being Muslims to next parliament.
ReplyDeletePlease YOU DO YOUR BEST.THEN OTHERS WILL FOLLOW YOU.GOOD CONCERN MR HISBULLAH.
ReplyDeleteஹிஸ்புல்லாஹ் அவர்களே, இந்த அறிக்கையும் ஒரு அரசியல் காய் நகர்வுதான். 21 எம்பிமாரிடமும் தனிப்பட்ட முறையில் கேட்டால் இதைத்தான் சொல்லுகிறார்கள். ஒரே ஒரு வித்தியாசம் நீங்கள் கொஞ்சம் முந்திக்கொண்டு அறிக்கைகளை விட்டு விடுவீர்கள். சீனியர் அல்லவா. நல்ல பரப்புரையாளர். ஆனால் நீங்கள் தான் சுயநல அரசியலுக்காக கழுத்தறுப்புக்கள் செய்து ஒற்றுமையை குழைப்பவர் என்பது வரலாற்று சான்று ( தலைவர் அஸ்ரப், ஹக்கீம், றிசாத் எல்லோரிடமும் முரண்பாடுகளை கொண்டவர் ). ஆனால் மக்கள் தெளிவானவர்கள் அதுதான் கடந்த தேர்தலில் தோக்கடிக்கப்பட்டீர்கள். இருந்தாலும் முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைப்பதட்காகவே மீண்டும் உங்களுக்கு தேசியப்பட்டியல் எம்பி பதவியும் மந்திரி பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அரசியல் செயட்பாடுகளை உற்று நோக்கினால், நீங்கள் ஹக்கீமை விட சிறப்பாகவே அரசியல் செயட்பாடுகளை முன்னெடுக்கிறீர்கள் என்பது எங்களது கணிப்பாகும். ஆக நாங்கள் கூறவருவது என்னவென்றால் நீங்களும், ஹக்கீம் அன் கோ களும் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டு புதியவர்களுக்கும், இளையவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும். எனவே மக்களும், இளைஞர்களும், புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும் மாற்றத்துக்காக முயட்சி செய்வார்களா?
ReplyDeleteநல்ல செய்தி முனாபிக்குகள் ஒதுக்கப்பட்டு முஸ்லிம்கள் உள்வாங்கப்படணும்
Deletemay Almighty Allahu subhanahuwathala United all muslim ummah together. may Allah pass your call heard every muslim members of parliament
ReplyDeleteதலைவர் அஷ்ரபுடன் எல்லாம் முடிந்துவிட்டது. அவரது ஆயுதம் விட்டுக்கொடுப்பு...
ReplyDeleteDemocracy under multi party means approach to freedom
ReplyDeletefrom more than one direction . Muslims are not exempt.
Face the reality . Don't try to blame 'unity' for your
failures . Sinhalese are not united ,Tamils are not
and the Christians are not ! So , you know very well
that you chose to swim in the muddy water . Now why the
talk of clean water swimming ? Easy to runaway from the
vulnerable MUSLIM VOTES of your responsibility ?? Let
us face the music ! WHO IS THE LEADER OF ALL MUSLIMS OF
WIDER SRILANKA ? WHO WHO WHO ???