2016 இல் மட்டும் முஸ்லிம் நாடுகளின் மீது 26,171 வெடிகுண்டுகளை வீசிய அமெரிக்கா
ஒபாமா ஆட்சி காலத்தில் கடந்த ஆண்டு மட்டும் யுத்தக்களத்தில் 26,171 வெடிகுண்டுகளை வீசியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஒபாமா, அதுவரை நடைபெற்று வந்த கொடூர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற வாக்குறுதியை அந்த நாட்டு மக்களுக்கு அளித்தார்.
தொடர்ந்து 8 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஜார்ஜ் புஷ், அமெரிக்க வரலாற்றிலேயே அதிக யுத்தங்களை முன்னெடுத்த ஜனாதிபதியாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஒபாமாவின் புதிய வாக்குறுதி அமெரிக்க மக்களை நெகிழ வைத்தது.
அதற்கேற்றார் போல ஆப்கான் மற்றும் ஈராக் நாடுகளில் குவிக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் எண்ணிக்கையை பெருமளவில் கட்டுப்படுத்தினார்.
ஆனால் வான்வழி தாக்குதல் மற்றும் சிறப்புப்படையினரின் செயல்பாடுகளை உலகெங்கும் முடுக்கிவிட்டார்.
2016 ஆம் ஆண்டு மட்டும் உலகெங்கும் 138 நாடுகளில் அமெரிக்க சிறப்புப்படையினரின் செயல்பாடுகள் 70% இருந்ததாக புதிய தரவுகள் உறுதி செய்துள்ளன. இது புஷ் அரசைவிட 130% அதிகம் என கூறப்படுகிறது.
மட்டுமின்றி ஒபாமா அரசு கடந்த ஓராண்டு மட்டும் 26,171 வெடிகுண்டுகளை வீசியுள்ளது. இது மணிக்கு 3 வெடிகுண்டுகள் என வீசப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில் பெரும்பாலான வான்வழி தாக்குதல்கள் சிரியா மற்றும் ஈராக்கில் நடந்துள்ளது. மட்டுமின்றி ஆப்கான், லிபியா, ஏமன், சோமாலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டதும் ஒபாமா ஆட்சி காலத்தில் தான்.
மட்டுமின்றி ஒபாமா ஆட்சி காலத்தில் தான் ஆளில்லா விமான தாக்குதல்கள் அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டது. இதுவும் குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஏமன் நாடுகளில் மட்டும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment