Header Ads



நல்ல உள்ளம் கொண்ட 2 பொலிஸார், 4 பிள்ளைகளின் தந்தைக்கு செய்த உதவி..!

நல்ல உள்ளம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்த குற்றவாளி ஒருவரின் அபராதப் பணத்தை நீதிமன்றில் செலுத்தி, குற்றவாளியை விடுவிக்க உதவியமை குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பலாங்கொடை பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் போது நீதிமன்றம் விதித்த அபராதப் பணத்தை குற்றவாளியினால் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து அபராதப் பணத்தை செலுத்தி குற்றவாளியை விடுவித்துள்ளனர்.

பலங்கொட மத்தேகந்த பிரதேசத்தைச் செர்ந்த 35 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கூலித் தொழிலில் ஈடுபட்டு வரும் குறித்த நபர் கள்ளு குடிக்கும் பழக்கமுடையவர்.

சில மாதங்களுக்கு முன்னதாக குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பிணையில் விடுதலை செய்திருந்தனர்.

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்ப்பட்ட தினத்தில் குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபருக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பலங்கொடை பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பலாங்கொடை பதில் நீதவான் எம்.எம். குணவர்தன எதிரில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அபராதப் பணத்தை செலுத்த முடியாது குறித்த நபர் அவதியுற்ற வேளையில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து அபராதப் பணத்தை செலுத்தியுள்ளனர்.

அபராதப் பணம் செலுத்தத் தவறினால் மூன்று மாத கால சமூக நன்னடத்தை சேவையில் ஈடுபடவோ அல்லது சிறைத்தண்டனையோ விதிக்கப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டால், 12 வயதுக்கும் குறைந்த நான்கு பிள்ளைகளும் நோய்வாய்ப்பட்டுள்ள அவரது மனைவியும் பாதிக்கப்படக் கூடும் என்ற காரணத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அபராதப் பணத்தை செலுத்தியுள்ளனர்.

2 comments:

  1. மனிதாபிமானமற்ற நீதவான்

    ReplyDelete
  2. Mersey less judge and kindness policemen under one roof

    ReplyDelete

Powered by Blogger.