175 Mp களை, ஹெலிகெப்டரிலிருந்து தள்ளிவிட வேண்டும் - ரஞ்சன் அதிரடிப் பேச்சு
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வழக்கு விடயத்தில் யார் எந்தவித கோரிக்கையை விடுத்தாலும் பிரதமர் அதில் தலையிடக் கூடாது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி போன்று கடுமையான தலைவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் பிரதமரும் ஜனாதிபதியும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை போன்று கடுமையானவர்கள் அல்லவெனவும் தவறிழைப்போருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளையே அவர்கள் எடுப்பார்கள் எனவும் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி போல் செயற்பட்டால் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 175 பேரை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி செய்ததை போன்று ஹெலிகொப்டரில் இருந்து தள்ளிவிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ஊழல்களில் ஈடுபட்ட அரசாங்கத்தில் உள்ளவர்களையும் இவ்வாறே செய்ய வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
பல்வேறு குற்றங்கள் மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுக்கள் இருந்த ஆர்னால்டோ ஒசான்செஸ்யை கியூப தலைவர் பிடெல் கஸ்ரோ கையாண்டதை போன்றே ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment