ஹம்பாந்தோட்டையில் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது
ஹம்பாந்தோட்டையின் நாளைய தினம் முதல் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது என ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நாளைய தினம் (07) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருந்த நிலையிலேயே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 26 பேருக்கு இது தொடர்பில் தனிப்பட்ட முறையில் அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment