சிறுவர் விஞ்ஞானியாக 13 வயது முஸ்தபா அஹ்மத்
'சண்டிகர்' பலகலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய சிறுவர் விஞ்ஞானி கூட்டமைப்பின் 23-வது 'NCSC' (National Children Science Congress) மாநாட்டில்,
அசாம் மாநிலத்தை சேர்ந்த 13 வயது 'முஸ்தபா அஹ்மத்' சிறுவர் 'விஞ்ஞானி'யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தின் 'ஜோர்ஹட்' பகுதியில் அரசு பள்ளிக்கூட மாணவனாகிய முஸ்தபா, பூச்சிகளிடமிருந்து விவசாய பயிர்களை பாதுகாப்பது குறித்த தனது ஆராய்ச்சியை சமர்ப்பித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 600 விஞ்ஞான மாணவர்கள் கலந்துக் கொண்ட இந்த மாநாட்டில், 16 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்,
தேர்வு செய்யப்பட்ட 16 'சிறுவர் விஞ்ஞானி'ளில் ஒருவர் தான், முஸ்தபா அஹ்மத் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment