குடிநீர்த் தட்டுப்பாடா..? 117 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்
குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பான முறைப்பாடுகளை 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இவர் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பான முறைப்பாடுகளை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக நாடு முழுவதிலும் உள்ள 9 மாவட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சாரம், நீர் மாத்திரம் அன்றி உணவு பொருட்களையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் இவ்வாறு கோரியுள்ளது. வறட்சியால் ஏற்பட்டும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள இந்த செயற்பாடு அவசியம் எனவும் மத்திய நிலையமும் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment