முஸ்லிமுக்கு சொந்தமான காணியில் புத்தர்சிலை, சிக்கல் நீடிக்கிறது, பிரதேசத்துக்கு 10 நாட்கள் பாதுகாப்பு
கெலிஓய நிவ்எல்பிட்டிய முஸ்லிம் கிராமத்தில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக பெரும்பான்மை இனத்தவர்களால் கடந்த சனிக்கிழமை இரவு புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சகல மத அமைச்சர்களும் கலந்துகொள்ளும் மாதாந்த கூட்டத்தில் நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜேதாச ராஜபக் ஷவுடன் கலந்துரையாடி அவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை அறிந்துகொண்ட முஸ்லிம்கள் மற்றும் நிவ்எல்பிட்டிய பள்ளிவாசல் நிர்வாகம் அமைச்சர் ஹலீமை தொடர்புகொண்டு விபரம் தெரிவித்த பின்பு அமைச்சர் மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டார்.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அப்பகுதி பன்சலைக்கு சென்று சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றிக்கொள்ளுமாறு உத்தரவிட்டனர். திங்கட்கிழமை மாலை வரை கால அவகாசம் வழங்கியிருந்தனர். சிலை அகற்றப்படாவிட்டால் நீதிமன்ற உத்தரவை பெற்று அகற்றப்படும் எனவும் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் மாலைவரை சிலை அகற்றப்படாததனால் கண்டி நீதிவான் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்து நீதிவானின் அனுமதி கோரினர்.
சிலையை அகற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கினால் இதுபோன்ற கோரிக்கைகள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படலாம் எனத் தெரிவித்த நீதிவான், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளை தொடர்புகொண்டு உத்தரவொன்றினை பெற்றுக்கொள்ளுமாறு தீர்ப்பளித்தார்.
சிலை வைக்கப்பட்டுள்ள பிரதேசத்துக்கு 10 நாட்கள் பாதுகாப்பு வழங்குமாறும் தெரிவித்தார். தற்போது அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தின் பெளத்தமத தலைவர்களைச் சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தி சாதகமான முடிவொன்றினைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் ஹலீம் தெரிவித்தார். நாட்டில் இன முறுகல்களை ஏற்படுத்துவதற்குத் தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ள சந்தர்ப்பத்தில் இவ்விவகாரத்தை மிகவும் கவனமாகவே அணுகவேண்டுமெனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மத்திய மாகாணசபை உறுப்பினர் லாபிர் ஹாஜியாரை தொடர்புகொண்டு வினவியபோது, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுடன் கலந்துரையாடியுள்ளேன். மேலும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் தன்னை இன்று புதன்கிழமை சந்திக்கும்படி கூறியிருக்கிறார்.
கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேந்திரவுடனும் பேசினேன். நீதிவான் இப்பிரச்சினையை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறும் தெரிவித்திருக்கிறார். உடுநுவர பிரதேச செயலாளரையும் தொடர்பு கொண்டேன். சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவ்வாறு அகற்றப்படாவிடின் நீதிமன்றில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட காணி முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமானதாகும். அதற்கான காணி உறுதியும் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவர் காணிக்கு வேலி அமைக்காதிருந்ததாலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இக்காணியில் இசை நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கு பெரும்பான்மை இனத்தவர்கள் அனுமதி கோரியும் அனுமதி வழங்கப்படாததினாலே பெரும்பான்மை இனத்தவர்கள் அவ்விடத்தில் புத்தர் சிலையை நிறுவியுள்ளார்கள். இது சட்டவிரோதமானதாகும்.
முஸ்லிம்கள் அவ்விடத்தில் பள்ளிவாசல் ஒன்றை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்து வருவதனாலே சிலையை நிறுவியதாக சம்பந்தப்பட்டவர்கள் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபை அமர்விலும் இது பற்றி பேசவுள்ளேன் என லாபீர் ஹாஜியார் தெரிவித்தார்.
Former President Buddist, Current President Buddist, BBS Buddist and all the high ranking ministers and officers are Buddist.......... where we can get justice. We all know about villpattu matter and President Mythripala knows than us because he was the secretary of SLFPA and the Minister of former government, how he act.
ReplyDelete