'பள்ளிவாசலை நிறுவ முயற்சிப்பதால், புத்தர் சிலையை வைத்தோம்' - 100 வீத முஸ்லிம்கள் வாழும் பகுதியின் நிலைமை
-ARA.Fareel-
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கெலிஓய நிவ்எல்பிட்டிய எனும் பிரதேசத்தில் தக்கியா ஒன்றுக்குப் அருகிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணிக்கருகில் ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவோடிரவாக பெரும்பான்மை இனத்தவர்கள் புத்தர் சிலையொன்றினைக் கொண்டு வைத்துள்ளமையால் அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் பீதியடைந்துள்ளனர்.
முஸ்லிம்களே நூறு வீதம் வாழும் இப்பகுதியில், முஸ்லிம்கள் அருகிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுடன் நல்லுறவுடன் வாழ்ந்துவரும் சூழ்நிலையில் இவ்வாறு சிலை வைக்கப்பட்டுள்ளமை இன முறுகலை உருவாக்கும் நிகழ்வாக அவர்கள் கருதுகின்றனர்.
இது தொடர்பில் நிவ்எல்பிட்டி கிராம முஸ்லிம்கள் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமிடம் முறையிட்டதனையடுத்து அமைச்சர் மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டியுள்ளார்.
பேராதெனிய பொலிஸார் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து புத்தர்சிலை வைத்து அதனைப் பாதுகாத்து வருபவர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதி பெற்றுக் கொள்ளாது ஓர் இடத்தில் புத்தர்சிலை நிறுவ முடியாது என அவர்களுக்குத் தெளிவுபடுத்தியதுடன் சிலையை அகற்றிக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கை சம்பந்தப்பட்டவர்களால் நிராகரிக்கப்பட்டதையடுத்து, சிலை அகற்றிக் கொள்ளப்படாவிட்டால் இன்று திங்கட்கிழமை நீதிமன்ற உத்தரவின் மூலம் சிலை அகற்றப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.
இச் செய்தி அச்சுக்குப் போகும்வரை சிலை அகற்றிக் கொள்ளப்படவில்லை.
குறிப்பிட்ட காணியில் முஸ்லிம்கள் பள்ளிவாசல் ஒன்று நிறுவ முயற்சிப்பதாலேயே அவ்விடத்தில் புத்தர் சிலை நிறுவியதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உடுநுவர தொகுதிக்குப் பொறுப்பான செயலாளர் லாபிர் மௌலவியைத் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார். இப்பகுதி முஸ்லிம்கள் பொறுமை காக்கும்படி கேட்கப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தை சுமுகமாக தீர்த்து கொள்வதற்கு இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட காணியில் கடந்த சிங்கள புதுவருட நிகழ்வாக இசைக் கச்சேரி நடத்துவதற்கு பெரும்பான்மை மக்களால் அனுமதி கோரப்பட்டது. என்றாலும் முஸ்லிம்கள் வாழும் பகுதி என்பதால் அது மறுக்கப்பட்டது. இதனாலேயே இக்காணியில் புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளதென கருதுகிறோம். குறிப்பிட்ட காணி முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியுடன் கூடிய ஒதுக்கப்பட்ட (Reservation) காணியாகும் என்றார்.
அனுமதி பெற்றுக் கொள்ளாது பலாத்காரமாக எவ்விடத்திலும் புத்தர்சிலை நிறுவ முடியாதெனவும் பொலிஸார் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
இதே வேளை உடுநுவர பிரதேச செயலாளர் குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பாக பேராதெனிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அச்சிலையை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த காணி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட காணியாகும். இக் காணியை முஸ்லிம் ஒருவர் 2008 ஆம் ஆண்டு முதல் பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு வரி செலுத்தி உபயோகித்து வருகிறார்.
புத்தர் படும் பாடு...
ReplyDeleteSo this owner made a big mistake in refusing to give this land to have a music party as it is the government land which he pays the tax. thereby angering the area people.We must learn to cooperate with majority people when there are any needs to have a co-existence.
ReplyDeleteTo be a too religious is too dangerous.to achieve something we have to give up something.