Header Ads



நீதிமன்ற தடைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம், பதற்றத்தில் 10 பேர் காயம், அங்குரார்ப்பனம் செய்த ரணில்


ருஹூனு அபிவிருத்தி வலய அடிக்கல் நாட்டு விழா இடம்பெறும் வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை சீனா கைத்தொழில் செயற்றிட்ட நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு வந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிகழ்வினை அங்குரார்ப்பனம் செய்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வருகைத்தந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வலயத்தை சீனாவுக்கு கையளிக்கக்கூடாது என்று கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எனினும் அரசாங்கம் அந்த திட்டத்தை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளது.

மேலும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்வுகளை குழப்புவதற்கு கற்களை வீசியுள்ளனர்.

இதனால் ஆர்ப்பாட்டகாரர்கள் கூடியிருந்த பகுதியை நோக்கி பொலிஸார், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதில் 3 பொலிஸார் உட்பட்ட 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த நிகழ்வு இடம்பெறும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் அதிரடி படை பிரிவினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இன்று ஹம்பாந்தோட்டை வலய பகுதியில் ஆர்ப்பாட்டத்தைமேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.