Header Ads



SLMC சிக்­கலைத் தீர்க்காவிட்டால், தேர்­தலில் போட்­டி­யி­டமுடியாத பரிதாபம் ஏற்படும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் பதவி தொடர்­பான சிக்­கலை, இம்­மாதம் 15 ஆம் திக­திக்கு முன்னர் தீர்த்து, செய­லாளர் அல்­லது செய­லாளர் நாயகம் என்­கிற பத­வி­களில் இரண்­டி­லொன்­றினை மாத்­திரம் முறைப்­படி தாபித்து, தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கு அறி­விக்­கு­மாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தவி­சாளர் மஹிந்த தேசப்­பி­ரிய – எழுத்து மூலம் அறி­வித்­துள்ளார்.

முஸ்லிம் காங்­கி­ரசின் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கு நவம்பர் மாதம் 16 ஆம் திக­தி­யி­டப்­பட்டு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்­தி­லேயே, இந்த அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட பிரச்­சினை தீர்க்­கப்­படும் வரையில், அதா­வது இம்­மாதம் 15 ஆம் திகதி வரையில், முஸ்லிம் காங்­கி­ரசின் செய­லாளர் மற்றும் செய­லாளர் நாயகம் ஆகிய இரு­வரின் பெயர்­க­ளையும், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சியல் கட்­சி­களின் நிரலில், செய­லாளர் பத­விக்­கு­ரி­ய­தாகக் காட்­சிப்­ப­டுத்­தா­தி­ருப்­ப­தற்கு, தாம் தீர்­மானம் மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் – அந்தக் கடி­தத்தில் மஹிந்த தேசப்­பி­ரிய குறிப்­பிட்­டுள்ளார்.

முஸ்லிம் காங்­கி­ரசின் செய­லாளர் பதவி தொடர்­பான சிக்­கலைத் தீர்த்துக் கொள்ளத் தவறும் பட்­சத்தில், எதிர்­வரும் தேர்­தல்­க­ளின்­போது, முஸ்லிம் காங்­கிரஸ் போட்­டி­யி­டு­வதில் சிக்கல் நிலை உரு­வாகும் என்­ப­தையும் ஆணைக்­கு­ழுவின் தவி­சாளர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மேலும் அந்தக் கடி­தத்தில்,

‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசில் கடந்த 07.11.2015 ஆம் திக­தி­யன்று மேற்­கொள்­ளப்­பட்ட யாப்புத் திருத்­தத்தின் மூலம், கட்­சியில் செய­லாளர் நாயகம் மற்றும் செய­லாளர் என இரண்டு பத­விகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அவற்றில், தேர்தல் அலு­வல்­களின் போது – செய­லாளர் பதவி ஏற்­பு­டை­ய­தென அறி­விக்­கப்­பட்­டது. மேலும் இது­வரை செய­லாளர் நாயகம் பதவி வகித்த எம்.ரி. ஹச­ன­லிக்குப் பதி­லாக, ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

இருப்­பினும் செய­லாளர் நாயகம் எம்.ரி. ஹச­னலி தனது பெயர் – அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சியல் கட்­சி­களின் பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வது தொடர்­பாக ஆட்­சே­பனை தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த நிலையில், முஸ்லிம் காங்­கி­ரசின் செய­லாளர்  பதவி தொடர்­பான சிக்கல் தீர்க்­கப்­ப­ட­வில்லை.

இதே­வேளை, தேர்தல் அலு­வல்கள் தொடர்­பான நியதிச் சட்ட நட­வ­டிக்­கை­களின் போது, நெருக்­க­டி­யான நிலை­மைகள் தோன்ற முடி­யு­மா­கையால், அர­சியல் கட்­சி­யொன்று தொடர்பில் செயலாளர் பதவி ஒன்று மட்டும் செல்லுபடியாகும்.

மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், செயலாளர் பதவிகள் இரண்டு அல்லது செயலாளர் மற்றும் செயலாளர் நாயகம் என இரு பதவிகள் கிடையாது’  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.