பர்தாவைக் கழற்ற வேண்டும் என்பது, இனிமேலும் நடைபெறாது தடுக்க வேண்டும் - வேலுகுமார் Mp
நம் நாட்டில் மூன்று தசாப்த காலமாக ஏற்பட்டிருந்த யுத்தம் மக்கள் மனதில் ஏற்படுத்திய வடு சகல இனங்களையும் இணைத்து ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த வழி வகுத்தது. அந்த நல்லாட்சியின் பயணத்திற்கு இடையூறாக வங்குரோத்து அரசியலை மேற்கொண்டு வரும் சிலரால் மதவாத அடிப்படையில் சில தூண்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நடைபெற்ற உரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு முள்ளிப்பொத்தானையில் அமைந்துள்ள பாடசாலைக்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுத சென்ற மாணவிகளுக்கு பர்தாவைக் கழற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது அதிகாரிகள் தன்னிச்சையாக எடுத்த முடிவு. இவ்வாறு மதவாத அடிப்படையில் செயற்படுவதை கண்டிப்பதோடு அரசாங்கம் தகுந்த நடவடிக்கையினை மேற்கொண்டு இவ்வாறான செயற்பாடுகள் இனி மேலும் நடைபெறாது தடுக்க வேண்டும்.
அம்மாணவிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் நாடு சுதந்திரம் அடைவதற்கும் அதன் பின்னரான நாட்டின் அபிவிருத்தியிலும் முஸ்லிம் சமூகம் ஆற்றிய பணி அளப்பரியது. இச்சமூகத்திற்கு எவ்வித கௌரவ இழப்பும் ஏற்பட விடமாட்டோம் என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.
Thank you sir.
ReplyDeleteஉன்மயை சரியாக சொன்னீர், நண்றிகள்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThank you sir
ReplyDeleteReally very great work sir.Thanks your kindness duty for us.
ReplyDeleteyou spoke the truth,
ReplyDelete