ஜனாதிபதிக்கு JMC - International சார்பாக மகஜர்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியுடன் JMC-International அமைப்பானது இலங்கை மக்கள் எதிர்கொண்டு வரும் இனவாத பிரச்சினைகளை முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக அதனை கொழுந்து விட்டெரியாமல் முளையிலேயே தடுத்து நிருத்தவும் அதற் எதிராக குரல் கொடுத்தும் வருகின்றது .இந்த வகையில் மிக நிதானத்துடன் எழிய முறையில் பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மோற்கொள்வதுடன் சில நல்லிணக்க வேலைதிட்டங்களையும் செய்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக நேற்று பிரான்சில் நடைபெற்ற நல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டதுடன் 05/12/2016 அன்று பிரான்சில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலயத்தில் நடைபெற்ற அமைப்புகளின் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு எமது இலங்கை உறவுகளுக்காக புலம் பெயர்ந்து வாழக்கூடிய சர்வதேச முஸ்லிம் மக்கள் சார்பாக பேசியதுடன் மஹஜர்களும் கையழிக்கப் பட்டது.
முதல் விடயமாக தூதுவராலயத்தின் ஊடாக கெளரவ ஜனாதிபதி (president )MAITHIRI PALA SRISENA ௮வர்களுக்கு மஹஜர் அனுப்பி வைக்கப்பட்டதுடன். தூதுவர் Hon (High commissioner )RANAVI RAJA அவர்களுக்கும் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த கெளரவ Hon DAMBARA AMILA Tero ,(அரசின் உயர் பீட ஆலோசகர்)மற்றும் Hon Dr ANIL JAYANTHA FARNANDO (வர்த்தக,பொருளியர் நிபுணர்)அவர்களுக்கும் மஹஜர் வழங்கபட்டு எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் படியும் சமூகங்களுக்கிடையில் சாமாதானத்தையும் சக வாழ்வை ஏற்படுத்துமாறு வேண்டி கொண்டதுடன் குறித்த மஹஜரில் முக்கிய மூன்று பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டது.
முதலாவது சிறுபாண்மையின மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத செயற்பாடுகள் ,இவ் விடயத்தில் அரசின் அசமந்தபோக்கு ,உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,தீர்வுகள் சட்டநடவடிக்கை என்பன பற்றியும் ,
இரண்டாவதாக 30 வருட யுத்தத்தினால் எதுவித தொடர்பும் இல்லாத அப்பாவி சமூகத்தை வளிந்து இழுத்து சிதைத்து சின்னாபின்னமாக்கி உரிமைகள் உடைமைகள்,உயிர்கள் பறிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு நிர்கதியாக சொந்த அடையாளத்தை தொலைத்து நிற்கும் வடமாகாண மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அதில் உள்ள சவால்கள் அரசு அதிகாரிகள் மற்றும் வாடமாகாண சபையின் அசமந்த போக்கு ,பாராபட்சம் ,குறித்து விரிவான விளக்கம் வழங்கியதுடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடபட்டிருந்தது
மூன்றாவதாக எமது சகோதர சமூகமான மியன்மார் மக்களுக்காக இலங்கை அரசும் பெளத்த குருமார்களும் கண்டணம் தெரிவிப்பதுடன் அநீதிக்கெதிராக முன்வந்து குரல் கொடுக்க வேண்டிக் கொண்டதுடன், மத்திய கிழக்கு பிரதேசங்களில் திட்டமிட்ட இன அழிவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள முஸ்லிம் நாடுகள் குறித்து கவனம் செலுத்துவதுடன் அவர்களுக்கு ஆதரவான பிரேரனைகள் நிறைவேற்றத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு சார்பாக மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வேண்டி கொள்ளப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் !
இது ஒரு முயற்சி அல்லது அனுகு முறையாகவே நாம் பார்கிறோம் இன்ஷா அல்லாஹ் இதை விட இன்னும் பலமான ஆரோக்கியமான ,அணுகூலத்துடன் கூடிய நல்ல திட்டங்களின் அடிப்படையில் பயணிக்கின்றோம் .சில விடயங்களைசொல்லி விட்டு செய்ய வேண்டும் இன்னும் சில விடயங்களை செய்து விட்டுதான் சொல்ல வேண்டும் என்பார்கள் ஆக எமக்கு விளம்பரம் தேவையில்லை ஆனால் உங்கள் பக்க பலம் மட்டுமே தேவையாக உள்ளது ஆக எமது உறவுகளுக்கான விடியலுக்கான இப்பயணத்தில் சகல மக்களும் இணைந்து முழுமையான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம். அனைவரும் எமது சமூகத்தின் எழுச்சிக்கா ஒண்றிணையுங்கள் உங்களால் எந்த வகையில் எவ்வாறான பங்களிப்பை வழங்க முடியுமோ முக்கியமாக உங்கள் அனுபவமிக்க ஆலோசனைகளை பெரிதும் எதிர் பார்கிறோம்.
Post a Comment