Header Ads



இலங்கை பள்ளிவாசல்களை, ISO சர்வதேச தரத்திற்கு உயர்த்த திட்டம்


எதிர்­வரும் 10 வருட கால எல்­லைக்குள் இலங்­கை­யி­லுள்ள பள்­ளி­வா­சல்­களை ஐ.எஸ்.ஓ (ISO) சர்­வ­தேச தரத்­திற்கு உயர்த்­து­வ­தற்­கான திட்­ட­மொன்­றினை கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் தயா­ரித்­துள்­ளது. 

இத­ன­டிப்­ப­டையில் பள்­ளி­வா­சல்­களின் சூழல், சுத்தம், அடிப்­படை வச­திகள் ஜமா அத்­தார்­களின் வாழ்க்கைத் தரம், தலை­மைத்­துவம் என்­ப­வற்றில் அதிக கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ள­துடன் இது தொடர்பில் ஜமா அத்­தார்கள் மற்றும் பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கிகள் தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். 

அண்­மையில் கொழும்பில் நடை­பெற்ற 12 பள்­ளி­வாசல் சம்­மே­ள­னங்கள் உள்­ள­டங்­கிய கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்­களின் சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்ட ஒன்று கூட­லின்­போதே இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்­களின் சம்­மே­ள­னத்தின் தலை­வரும் இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்­கத்தின் தலை­வ­ரு­மான எம்.அஸ்லம் ஒத்மான் தெரி­வித்தார். 

கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் எம்.அஸ்லம் ஒத்மான் இது தொடர்பில் “விடி­வெள்­ளி”க்குக் கருத்து தெரி­விக்­கையில் ஐ.எஸ்.ஓ.தரச்­சான்­றிதழ் ஒரு சர்­வ­தேச தரச்­சான்­றி­த­ழாகும்.

இது­வரை காலம் நாட்­டி­லுள்ள பிர­பல நிறு­வ­னங்­களே ஐ.எஸ்.ஓ.தரச் சான்­றி­தழைப் பெற்று தமது நிறு­வ­னங்­களின் தரத்­தினை உயர்த்­தி­யுள்­ளன.

இதற்­காக நாம் பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. சமூ­கத்­தையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளையும் விழிப்­பு­ணர்­வூட்ட வேண்­டி­யுள்­ளது. அத­னா­லேயே நாம் 10 வருட வேலைத்­திட்­டத்­தினை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். 

நாட்­டி­லுள்ள அனைத்துப் பள்­ளி­வா­சல்­க­ளையும் இத்­திட்­டத்­தினுள் உள்­வாங்­க­வுள்ளோம்.

இன்று பள்­ளி­வா­சல்­களின் நிர்வாகிகள் பள்ளிவாசல்களுக்கு நிறம்பூசுவது சுத்தம் செய்வது போன்றனவற்றையே தங்களது கடமையாகக் கருதுகிறார்கள். இந்நிலை மாற வேண்டும். இதனை மாற்றியமைக்கவே நாம் விரும்புகிறோம் என்றார். 

 ARA.Fareel

1 comment:

  1. Tell me about one Muslim village or city tat is CLEAN !
    Muslims are not clean , their houses are not clean and
    their surroundings are not clean !Many mosques are
    surrounded by structures like CATTLE SHELTERS .Some
    mosques are situated in the middle of scrap metal heaps.
    There's a place called Makola , one Km off Kiribathgoda
    and the small mosque at Fathima Garden in Makola , is
    exceptionally well situated and maintained and all
    mosques can follow it as an example .City mosques may
    not have enough space but villages can do this .

    ReplyDelete

Powered by Blogger.