Header Ads



IS ற்கு அமெரிக்கா ஆதரவு, ஆதாரம் உள்ளதென்கிறார் எர்துகான் - வேடிக்கை என்கிறது அமெரிக்கா

அமெரிக்கா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவளிப்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக துருக்கிய ஜனாதிபதி ரிசிப் தயிப் எடோகன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு சார்பாகவே செயற்படுகின்றனர் என அண்மையில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உள்ளிட்ட டிப்பேஸ்ரூபவ் வை.பி.டி மற்றும் வை.பி.ஜி ஆகிய தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை ஊக்குவித்து வருவதற்கான ஆதார புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தன்னிடம் இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

சிரிய ஜனாதிபதி பசீர் அல் ஆசாத்திற்கு எதிராக கிளர்ச்சிகளை உருவாக்குவதற்கு கிளர்ச்சியாளர்களை அமெரிக்க படையினர் உருவாக்கி வருகின்றனர். இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் தாம் எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர்; ஜோன்கெரி ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை துருக்கிய ஜனாதிபதியின் கருத்துக்கள் வேடிக்கையானதாக இருப்பதாக அமெரிக்க தரப்புக்கள் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. US wants continuation of the conflict, and distructiin of ME resources, to this end, US may support different opposing groups at the same time to continue the war.

    ReplyDelete

Powered by Blogger.